மக்கள் தொகை கணக்கெடுப்பில் திடீர் ட்விஸ்ட்.. மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்
டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு வழக்கம் போல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதல் கட்டத்தில் வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டு வசதி குறித்த கணக்கெடுப்பு நடைபெறும். இரண்டாம் கட்டத்தில் தான் சாதி வாரியான கணக்கெடுப்பு உள்ளிட்ட மக்கள் தொகை கணக்கீடு நடைபெறும். இந்த இரண்டாம் கட்டப்பணிகள் அடுத்த ஆண்டு (2027) பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். 2011-க்குப் பிறகு 2021-ல் நடக்க வேண்டிய கணக்கெடுப்பு கோவிட் காரணமாகத் தள்ளிப்போய், இப்போது 2025-2026 காலகட்டத்தில் நடத்துவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்திய வரலாற்றில், 2025-26 கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெற இருக்கிறது. மக்கள் தங்களைப் பற்றிய தகவல்களை மொபைல் ஆப் மூலம் தாங்களாகவே பதிவு செய்யும் வசதியும் இருக்கும்.

இது தரவுகளை விரைவாகச் சேகரிக்கவும், துல்லியமாகப் பகுப்பாய்வு செய்யவும் உதவும். மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதி, மக்கள் தொகையின் அடிப்படையிலேயே ஒதுக்கப்படுகிறது. எத்தனை பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் தேவை என்பதைத் தீர்மானிக்க இது அவசியம் ஆகும்.
மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், "2027-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த முழுமையான தகவல்கள் ஏற்கனவே கடந்த மாதம் 12-ந் தேதி வெளியிடப்பட்டது. இருப்பினும், சாதி வாரியான கணக்கெடுப்பு குறித்து சிலர் திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயன்று வருகின்றனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு வழக்கம் போல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதல் கட்டத்தில் வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டு வசதி குறித்த கணக்கெடுப்பு நடைபெறும். இரண்டாம் கட்டத்தில் தான் சாதி வாரியான கணக்கெடுப்பு உள்ளிட்ட மக்கள் தொகை கணக்கீடு நடைபெறும்.இந்த இரண்டாம் கட்டப்பணிகள் அடுத்த ஆண்டு (2027) பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் தொடங்கும்.
அதே சமயம், ஜம்மு காஷ்மீர், இமாசலபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பனிப்பொழிவு அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும், முன்கூட்டியே அதாவது வருகிற செப்டம்பர் மாதமே இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.முதல் கட்ட கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் 1-ந் தேதி தொடங்க உள்ளது. இதில் கேட்கப்பட வேண்டிய 33 கேள்விகள் குறித்த அறிவிக்கையை மத்திய அரசு கடந்த ஜனவரி 22-ந் தேதி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications