Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் வெட்டப்பட்ட பெண்.. சிகிச்சை பலனின்றி பலி.. கொலைகாரன் எங்கே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று வெட்டப்பட்ட ராஜேஸ்வரி என்ற பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலமின்றி பலியானார்.

கடந்த 2016ல் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். காலையில் மக்கள் கூட்டம் நிறைந்த ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த கொலை தமிழ்நாட்டையே உலுக்கியது. ஒருதலைக் காதல் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதை பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

The woman who heckled yesterday in Saidapet died of injuries: Police searches for the culprit

இந்த கொலையை செய்ததாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். சிசிடிவி காட்சியில் நீல கட்டம் போட்ட சட்டை அணிந்து இருந்தது இவர்தான் என்று கூறி செங்கோட்டைக்கு அருகே மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த ராம் குமார் கைது செய்யப்பட்டார். போலீசார் இவரை கைது செய்யும் இவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது.

இவர் அப்போது கழுத்தில் பிளேடால் அறுத்துக்கொண்டதாக போலீசார் தரப்பு தெரிவித்தது. இதனால் ராம் குமார் ஒருவார்த்தை கூட பொதுவில் பேசவில்லை. அதன்பின் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம் குமார் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டிருந்த ராம்குமார் புழல் சிறைச்சாலையில் 2016 செப்டம்பர் மாதம் 17ம் தேதி மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

சைதாப்பேட்டை சம்பவம்: தமிழ்நாட்டையே இந்த சம்பவம் உலுக்கியது. தற்போது அதேபோன்ற சம்பவம் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நடைபெற்று உள்ளது. பழ வியாபாரம் செய்துவரும் ராஜேஸ்வரி என்ற பெண்தான் நேற்று சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் வெட்டப்பட்டார்.

கடற்கரை- தாம்பரம் ரயிலில் பயணம் செய்து வந்த நேற்று இரவு பணி முடித்துவிட்டு சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி உள்ளார். அதே ரயிலில் ராஜேஸ்வரியுடன் ஒருவர் பயணம் செய்துள்ளார். அவரை நெருக்கமாக கண்காணித்து உள்ளார்.

இந்த நிலையில் ராஜேஸ்வரி இறங்கும் நேரம் பார்த்து நொடியில் அவரை சரமாரியாக கத்தியால் வெட்டி உள்ளார். அதோடு இல்லாமல் ரயில் எடுக்கும்வரை அவரை கத்தியால் வெட்டிய அந்த இளைஞர் அதே ரயிலில் அங்கிருந்து தப்பித்து ஓடி இருக்கிறார்.

ரத்த வெள்ளத்தில் படுகாயங்களோடு ராஜேஸ்வரி மிதந்து உள்ளார். இதையடுத்தே ரயில்வே போலீசார் உடனே அவரை மீட்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆஜர்படுத்தினர். நேற்று இரவு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு இரவு முழுக்க தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

காயங்கள் அதிகமாக இருந்ததால் அவருக்கு ரத்த போக்கும் அதிகமாக இருந்தது. அதேபோல் அவரின் உடல் உறுப்புகள் பல வெட்டப்பட்டு இருந்ததால் அவசர ஆபரேஷனும் செய்யப்பட்டது. ஆனால் ரத்து போக்கு, உறுப்புகள் சேதம் காரணமாக அவர் மரணம் அடைந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகும் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பின் காதல் அல்லது பண விவகாரம் காரணமாக இருக்கலாமா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து தப்பிச் சென்ற குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கி இருக்கிறார். கத்தியால் குத்திவிட்டு தப்பிய மர்ம நபர் யார்? ராஜேஸ்வரிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+