துவங்கியது உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு.. 1,000 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு
சென்னை: உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இந்த போட்டிக்காக 1,000 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் தேர்வாகியுள்ளனர். பல லட்சம் ரூபாய் மதிப்பிற்கு இந்த போட்டிக்காக பரிசுகள் தயார் செய்யப்பட்டு உள்ளன., உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கவுள்ள காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கி தற்போது முடிந்துள்ளது.

பாலமேடு ஜல்லிக்கட்டு; இன்று மாலை வரை இந்த போட்டிகள் நடக்கும். ஜல்லிக்கட்டு தமிழ் பாரம்பரியத்தில் நீண்ட வரலாறு கொண்டது ஆகும். இது கிமு 400-100 முதல் நடைமுறையில் இருந்ததாக அறியப்படுகிறது. பண்டைய தமிழ்நாட்டின் 'முல்லை' பகுதியில் வாழ்ந்த ஆயர் பழங்குடியினர் மக்களிடையே இது ஒரு கலாச்சார சடங்கு. பின்னர், துணிச்சலை வெளிப்படுத்தும் தளமாக இந்த ஜல்லிக்கட்டு மாறியது.
போக போக இளைஞர்கள் இதில் பங்கேற்பதை ஊக்குவிப்பிற்காக பரிசுத் தொகை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறையை சித்தரிக்கும் சிந்து சமவெளி நாகரீகத்தின் முத்திரை, புது தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. மதுரை அருகே கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளைக் கயோலின் குகை ஓவியம், காளையைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் ஒரு தனி மனிதனைச் சித்தரிப்பது, சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் வரலாற்று ரீதியாகவும் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற்று வந்தது உறுதியாகி உள்ளது. இதில் பாலமேடு ஜல்லிக்கட்டு பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும்.
வழக்கு: கடந்த வருடம்தான் ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட போட்டிகளுக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடுத்து இருந்தன . உச்ச நீதிமன்றத்தில் இந்த போட்டிக்கு எதிராக இவர்கள் தொடுத்த வழக்கு அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்து வந்தது. இதில் தமிழ்நாடு அரசு வென்றது.
தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, மாநில அரசு ஒன்று இது கலாச்சாரம் என்று சட்டம் இயற்றி உள்ளது. நாங்கள் அதனை ஏற்றுக் கொள்கிறோம். அதை நாங்கள் மாற்ற விரும்பவில்லை. அதனால் ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது.
தொன்மையான கலாச்சார ரீதியான விஷயங்களில் நாங்கள் தலையிட முடியாது என்று ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டமன்றத்தின் முடிவை, அதன் பார்வையை நாங்கள் எதிர்க்க மாட்டோம், மேலும் இது மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். தொன்மையான ஒரு கலாச்சாரம் இது என்று சட்டமன்றம் அவசர சட்டத்தில் முடிவு செய்துள்ளது. அவர்களின் சட்டத்தில் இது தமிழ்நாட்டு கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிகட்டு போட்டி தமிழ்நாட்டின் பாரம்பரிய, கலாச்சாரம் என மாநில அரசு கருதினால் அதில் நீதிமன்றத்துக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அப்படி இருக்கும் போது தொன்மையான கலாச்சார ரீதியான விஷயங்களில் நாங்கள் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அந்த தீர்ப்பில் வென்ற நிலையில் இந்த வருடம் பிரச்சனை இன்றி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications