14 வயது சிறுமியை துப்பட்டாவால் கட்டி.. வாயில் சோப்பு ஆயிலை ஊற்றி.. சீரழிக்க முயன்ற அயோக்கியன்
14 வயது சிறுமியை கற்பழிக்க முயன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை: 14 வயசு பொண்ணை துப்பட்டாவால் கட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ள பயங்கரம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர்தான் இந்த சிறுமி. அந்த பகுதியிலேயே உள்ள ஸ்கூலில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று சாயங்காலம் மணி 5 இருக்கும். அப்போது வீட்டில் சிறுமி தனியாக இருந்தாள்.

ஆட்டோ டிரைவர்
அப்போது பக்கத்து வீட்டுக்காரர் விஜி தாமஸ் என்பவர் திடீரென வீட்டுக்குள் நுழைந்தார். 26 வயதான விஜி தாமஸ் ஒரு ஆட்டோ டிரைவர் ஆவார். அந்த பகுதியில் 6 வருஷங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

சோப்பு ஆயில்
விஜி தாமஸ் வீட்டுக்குள் நுழைந்ததும், முதல் வேலையாக சிறுமியின் கைகளை அவளது துப்பாட்டாவால் கட்டிவிட்டார். பிறகு சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது சிறுமி பயத்தில் அலறி கூச்சல் போட்டாள். இதனால் இன்னும் ஆத்திரம் அடைந்த விஜி தாமஸ், சோப்பு ஆயிலை எடுத்து சிறுமியின் வாயிலேயே ஊற்றிவிட்டார்.

சிறுமியின் அழுகுரல்
இதையடுத்து பதட்டமடைந்த விஜிதாமஸ் உடனடியாக வீட்டை விட்டு வெளியே ஓடிவிட்டார். சிறுமியின் அழுகுரலை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, துப்பாட்டாவால் கைகள் கட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தலைமறைவு
உடனடியாக அவளை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், சிறுமியின் தாயார் புளியந்தோப்பு மகளிர் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். வழக்கை பதிவு செய்த போலீசார் எஸ்கேப் ஆகியுள்ள விஜி தாமஸை தேடி வருகின்றனர்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications