திடீரென முதல்வரின் கான்வாய்க்குள் புகுந்த பைக்.. இளைஞர் கைது- அப்புறம் காத்திருந்த ‘பகீர்’ ட்விஸ்ட்!
சென்னை : சென்னையில் முதல்வர் ஸ்டாலினின் பாதுகாப்பு வாகனங்களை பைக்கில் முந்த முயன்றவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அந்த நபர் ஓட்டி வந்த பைக் திருடப்பட்டது எனத் தெரியவந்துள்ளது.
அஜித்குமார் என்பவர் ஓட்டிச் சென்ற நம்பர் பிளேட் இல்லாத பைக் திருடப்பட்டது என தெரியவந்த நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
திருட்டு பைக்கில் முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களை இளைஞர் ஒருவர் முந்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்வர் கான்வாய்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு மதியம், தலைமை செயலகத்தில் இருந்து தனது வீட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் கிளம்பினார். முதல்வரின் காருக்கு முன்பும் பின்பும் வழக்கமான பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்தபடி சென்றுள்ளன.

குறுக்கே புகுந்த பைக்
முதல்வரின் கான்வாய் சென்னை மெரினா காமராஜர் சாலையில் நேப்பியர் பாலத்தை கடந்து சென்ற நிலையில் திடீரென சாலையில் எதிர்த்திசையில் இருந்து ஆக்டிவா இரு சக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் திடீரென குறுக்கே வந்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத போலீசார் அந்த இளைஞரை மடக்கிப்பிடித்தனர்.

திருட்டு பைக்
அந்த இளைஞர் ஓட்டி வந்த ஆக்டிவா பைக்கில் நம்பர் பிளேட் இல்லை. இதனால் சந்தேகமடைந்து துரிதமாக செயல்பட்ட போலீசார் அவரிடம் பைக்கை பறிமுதல் செய்து தீவிர விசாரணையை தொடங்கினர். விசாரணையில், அஜித்குமார் என்ற அந்த நபர் ஓட்டிச் சென்ற நம்பர் பிளேட் இல்லாத பைக் திருடப்பட்டது என தெரியவந்தது.

போலீசார் விசாரணை
இதைத்தொடர்ந்து அந்த இளைஞரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல, ஆழ்வார்பேட்டையிலும், முதல்வர் ஸ்டாலினின் கான்வாய் வாகனங்களை பைக்கில் முந்திச் செல்ல முயன்ற நபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications