"போடா வாடா" மேடையில் சண்டை..எகிறிய எம்எல்ஏ! தேனியில் தங்க தமிழ்செல்வனுக்கு ஆதரவாக முளைத்த போஸ்டர்கள்
தேனி: தேனியில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் திமுக எம்பி.தங்க தமிழ்ச்செல்வனும்,
எம்எல்ஏ.மகாராஜனும் மேடையில் கலெக்டர் முன்னிலையில் "போடா வாடா" என்று ஒருமையில் பேசி சண்டையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், எம்.எல்.ஏ.மகாராஜனுக்கு கண்டனம் தெரிவித்து தங்கதமிழ்செல்வனுக்கு ஆதரவாக தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டியதால் பரபரப்பு நிலவுகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா ஜக்கம்பட்டி இந்து மேல்நிலைப் பள்ளியில் நேற்றைய தினம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
இதில், தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், திமுக தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் , ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன்,பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் முதற்கட்டமாக கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கினார்கள். அதன் தொடர்ச்சியாக கட்டுமான நல வாரியத்தில் சார்பில் விபத்து நிவாரண தொகைக்கான ஆணையை தேனி எம்.பி.தங்க தமிழ்ச்செல்வன் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு வழங்க முற்பட்டார். அப்போது அந்த ஆணையினை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் எம்.பி.கையில் இருந்து பறித்து இது நான் வாங்கி கொடுத்தது, நான் தான் கொடுப்பேன் என பொதுமக்கள் முன்னிலையில் பறித்து பயனாளிக்கு கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ மகாராஜனை பார்த்து "போடா மு*** பயலே" என்று கலெக்டர் முன்னிலையிலேயே பகிரங்கமாக கூறினார். தனது தொகுதியில், தொகுதி மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக மேடையிலேயே கூறியதால் அதிர்ச்சி அடைந்த எம்எல்ஏ மகாராஜன் "யாரைப் பார்த்து மு**** பயலே என சொல்ற.. தொலைச்சிருவேன்"என்று தங்கதமிழ்செல்வனை பார்த்து சீறினார்.
திமுக எம்.பி.யும், திமுக எம்எல்ஏவும் சண்டையிடுவதை பார்த்த கலெக்டர் ரஞ்ஜீத்சிங் பதறிப்போனார். உடனடியாக சுதாரித்த செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி நன்றி உரை கூறி வேகமாக நிகழ்ச்சியை முடித்து வையுங்கள் என்று தெரிவித்து அவசர அவசரமாக முடித்து வைத்தனர். திமுக எம்பியும், எம்எல்ஏவும் பொதுமக்கள் முன்னிலையில் "போடா வாடா" என சண்டையில் ஈடுபட்டதால் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்நிலையில், எம்.எல்.ஏ.மகாராஜனுக்கு கண்டனம் தெரிவித்து தங்கதமிழ்செல்வனுக்கு ஆதரவாக தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டியதால் பரபரப்பு நிலவுகிறது. ஆண்டிப்பட்டி கிழக்கு, மேற்கு, ஒன்றியம் மற்றும் பேரூர் கழகம் என குறிப்பிடப்பட்ட அந்த போஸ்டரில்," 25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வனை ஒருமையில் பேசிய ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும் கட்சியினரை மதிக்காத அவர் மீது தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஒரே கட்சியை சேர்ந்த எம்பி, எம்எல்ஏவும் மோதிக்கொண்ட நிலையில், எம்எல்ஏ வை கண்டித்து திமுகவினரே போஸ்டர் ஒட்டிய விவகாரம் ஆண்டிப்பட்டி திமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே எம்எல்ஏ மகாராஜன் உத்தரவின் பெயரில் இந்த போஸ்டர்களை ஒட்டியது யார்? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். மேலும் தங்கத்தமிழ்செல்வன் ஆதரவாளர்கள் இந்த போஸ்டர்களை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications