உதயநிதி ஏதோ பேசுகிறார்.. ஓபிஎஸ் எப்படி மாநில ஆளுநராக முடியும்? தேனி எம்பி ஓ.பி. ரவீந்திரநாத் கேள்வி
ஓபிஎஸ் எப்படி மாநில ஆளுநராக முடியும்?- தேனி எம்பி ஓ.பி. ரவீந்திரநாத் கேள்வி
சென்னை: ஓ. பன்னீர் செல்வம் எப்படி ஒரு மாநிலத்தின் ஆளுநராக முடியும் என தேனி எம்பியும் ஓபிஎஸ் மகனுமான ஓ.பி. ரவீந்திரநாத் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரு தினங்களாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
அப்போது அவர் கூறுகையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் அன்பை பெற்றவர். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நான் முதல்முறையாக உங்களை சந்திக்க வந்துள்ளேன். அதிமுக வேட்பாளர் ஓட்டு கேட்க வந்தால் அவரை விரட்டியடிக்கிறார்கள்.

மீசை இருக்கு
இதை டிவிக்களில் பார்க்க முடிகிறது. அந்த விரக்தியில்தான் இங்கு வந்த போது ஆம்பளையா என பேசி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி, ஆம்பளையாக இருந்தால் மீசை இருக்க வேண்டும். வேட்டி கட்ட வேண்டும் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். அவருக்கு மீசை இருக்குனு தெரியும்.

பெண்ணுரிமைக்கு போராடிய மண்
பெண்ணின் சம உரிமைக்கு போராடிய பெரியாரின் மண்ணில் இருந்து இதை பேசியிருக்கிறார். நீங்கள் என்ன மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வரா, நீங்கள் எப்படி முதல்வர் ஆனீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதிமுக ஆட்சியில் அடிமையாக இருந்தவர்கள் இப்பவும் பாஜகவுக்கு அடிமையாக இருக்கிறார்கள்.

எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும்
எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் அவர்களுடைய பிரச்சினைக்கு பிரதமர் மோடிகிட்ட போனாங்க, என்றைக்காவது மக்கள் பிரச்சினைக்கு போயிருக்கிறார்களா? ஒரு முறை தவறுதலாக எடப்பாடி என் வண்டியில் ஏற போயிட்டாரு! அப்பவே கமலாலயத்திற்கு மட்டும் போயிடாதீங்கன்னு சொன்னேன். இப்போ இரண்டு பேருமே போட்டி போட்டுக் கொண்டு கமலாலயம் போகிறார்கள்.

ஈரோட்டில் 1000 கோடி ரூபாய்
ஈரோட்டில் 1000 கோடி ரூபாய் அளவில் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள்தான் இருக்கின்றன. உங்கள் வாக்குகளை காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்திற்கு அளியுங்கள். பாஜக என்றால் கவர்னர் டிரெயினிங் சென்டர் என்ற பொருள். தமிழகத்திலிருந்து பாஜக தலைவர்களுக்கு பயிற்சி கொடுத்து ஆளுநராக்கிவிடுகிறார்கள். தமிழிசை, இல கணேசன், சிபி ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆளுநர்களாகிவிட்டனர். அந்த வகையில் ஓபிஎஸ்ஸும் இந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநராவார். அது போல் தமிழக பாஜக தலைவராக பழனிசாமி ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என உதயநிதி கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

ஓபிஎஸ் மகன் பதிலடி
இதற்கு பதிலடியாக ஓபிஎஸ் மகனும் தேனி எம்பியுமான ஓபி ரவீந்திரநாத் கூறுகையில், ஓபிஎஸ் எப்படி ஒரு மாநில ஆளுநராவார். ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ் எப்படி மாநில ஆளுநராக முடியும். தேர்தல் நேரத்தில் எதையாவது பேச வேண்டும் என உதயநிதி பேசியுள்ளார் என ஓபி ரவீந்திரநாத் பதிலடி கொடுத்துள்ளார்.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
ராஜ்யசபாவுக்கு செல்லும் ராகுலின் ‘டேட்டா கிங்’.. பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு! -
மகாராஷ்டிராவை பாருங்க.. தமிழ்நாட்டிலும் இதேமாதிரி செய்யனும்! விஜய்க்கு ஐடியா கொடுத்த அன்புமணி ராமதாஸ் -
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
திருவள்ளுவருக்கு காவி சாயமா.. கருப்பு சட்டையுடன் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வைகோ அதிரடி கைது -
தவெக ஆட்சியில்.. ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படுமா? வன்னி அரசு விளக்கம்!












Click it and Unblock the Notifications