சூடோமோனாஸால் செயலிழந்த உறுப்புகள்! வென்டிலேட்டருக்கு மறுத்த ராமநாதபுரம் பெற்றோர்! டீன் விளக்கம்
சென்னை: ராமநாதபுரத்தை சேர்ந்த கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது ஏன் என்பது குறித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒன்றரை குழந்தைக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில்டிரிப்ஸ் ஏற்றியபோது அதன் கை நிறம் மாறி அழுகியது. இதனால் குழந்தையின் உயிருக்கே ஆபத்து என கூறிய மருத்துவர்கள் உடனே அந்த குழந்தையின் வலது கையை அறுவை சிகிச்சை அகற்றினர்.

இந்த சம்பவத்திற்கு மருத்துவமனையின் அலட்சியப்போக்கே காரணம் என குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் குழந்தையின் கை அகற்றப்பட்டது ஏன் என்பது குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை விளக்கம் அளித்தது. அதில் pesudomonas என்ற கிருமியால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்த நாளத்தை பாதித்ததால் வலது கையில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது.
குழந்தைக்கு இரத்தநாள அடைப்பு மருந்தினாலோ, மற்ற சிகிச்சை முறைகளாலோ ஏற்படவில்லை. வென்ஷன் (vention) ஊசியை தமனியில் போடவில்லை என்பது பெற்றோர் மருத்துவர்களின் வாக்குமூலத்தில் உறுதியானது. குழந்தை அனுமதிக்கப்பட்ட உடனேயே காலதாமதமின்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இரத்த ஓட்டம் பாதித்ததால் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வலது கையை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. மருந்து கசிவினால் இரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது. குழந்தையின் உயிரை காக்கவே கை அகற்றப்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. அங்கு 35 நாட்கள் சிகிச்சை அளித்த நிலையில் கடந்த சில வாரங்களாக குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல்இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
இதுகுறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் தேரணி ராஜன் கூறியிருப்பதாவது: குழந்தை குறைபிரசவத்தில் பிறந்ததால் ஏற்பட்ட பக்கவாதத்தினால் தலையில் ரத்தம் உறைந்தது. குழந்தைக்கு முழுமையான வளர்ச்சிகள் இல்லை, குழந்தையின் ரத்த நாளங்களில் அழற்சி ஏற்படட்தால் ரத்த ஓட்டம் தடைபட்டது. குழந்தைக்கு சூடோமோனாஸ் பாக்டீரியா தொற்று ஏற்பட்டதால் கையை அகற்றும் நிலை ஏற்பட்டது. மேலும் அந்த பாக்டீரியா உடல் முழுவதும் பரவி அடுத்தடுத்த உறுப்புகள் செயலிழந்தன. மூளையில் ஸ்டென்ட் கருவி பொருத்த பெற்றோர் ஒப்புக் கொள்ளவில்லை.
அது போல் இன்குபேஷனில் வைக்கவும் செயற்கை சுவாசம் அளிக்கவும் கூட அவர்கள் மறுத்து கையெழுத்து போட்டு கொடுத்துள்ளனர். குழந்தை உயிர் பிழைக்கும் என்றால் மேல் சிகிச்சையை தொடரலாம் என்றனர். குழந்தைக்கு உயர் தர சிகிச்சை அளித்தும் சூடோமோனால் தொற்றை அகற்ற முடியவில்லை.தினமும் மூத்த குழந்தைகள் நல மருத்துவர்கள் குழந்தையை ஆய்வு செய்து அதன் அறிக்கையை எனக்கு அனுப்புவார்கள். நானும் இரு தினங்களுக்கு முன்பு குழந்தையை பார்த்துவிட்டு அவருடைய தாயிடம் ஒன்றரை மணி நேரம் பேசினேன். அப்போது அவரிடம் தெளிவாக சொல்லிவிட்டேன். குழந்தையின் உடல்நிலை மோசமாக இருக்கிறது.
அதன் உடல் முழுவதும் தொற்றானது பரவிவிட்டது. இதனால் குழந்தைக்கு எந்த நேரத்திலும் மரணம் ஏற்படலாம் என தெரிவித்தோம். அவர்கள் அதற்கான படிவத்திலும் கையெழுத்திட்டிருக்கிறார்கள். குழந்தையின் தாய் கூறுவதை போல் எந்த மருத்துவரும் அவரை கிண்டல் செய்யவில்லை. இதை நான் மறுக்கிறேன்.
அவரிடம் பேசும் மருத்துவர்கள் முதுநிலை மருத்துவர்கள். அதே போல் இந்த சிக்கல்கள் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த குழந்தைக்கு 32 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தேரணி ராஜன் தெரிவித்தார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications