மதுரை வீரனுக்கு வியட்நாமில் கோயில்! தாய்மொழி மறந்த ஹோசிமின் தமிழர்கள்!
சென்னை: நம்ம ஊர் மதுரை வீரனை வியட்நாம் மக்கள் பயபக்தியோடு வழிபட்டு வருகின்றனர்.
யூடியூப் கலாச்சாரம் உலகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. இதற்காக நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் எனப் பறந்து பறந்து பலர் படம்பிடித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் Thinush Vlogs என்ற பெயரில் சானல் நடத்தி வருகிறார். அவர் வியட்நாமில் உள்ள தமிழர்கள் வசிப்பதையும் அவர்கள் தாய்மொழியை மறந்து வாழ்ந்து வருவதையும் படம்பிடித்துப் போட்டுள்ளார்.
அந்தக் காணொளி தமிழர்கள் மத்தியில் வைரலாக மாறி வருகிறது. என்னது வியட்நாமில் தமிழ்க் கோயிலா? மதுரை வீரனுக்கு வழிபாடா? ஆம்!
வியட்நாமில் உள்ள அம்மன் கோயிலின் கோபுரம் அப்படியே அச்சு அசலாக ஒரே மாதிரி இருக்கிறது. அந்தக் கோயில் முகப்பில் இருபுறமும் பச்சை பசேல் என்று இரண்டு வாழை மரங்கள் நிற்கின்றன.

இந்தக் கோயில் முன்பாக ஊதுபத்தி போன்ற பூஜை சாமான்கள் விற்பனை செய்யும் யாருமே தமிழர்கள் இல்லை. கோயிலுக்கு நம்ம ஊரைப் போலவே காவி வண்ணம் பூசி இருக்கிறார்கள்.
இந்தக் கோயில் உள்ளே சில நாட்டுக்கோட்டைச் செட்டியார் தோற்றத்தில் உள்ளனர். ஆனால், அவர்களிடம் தமிழில் பேசினால் அவர்களுக்குப் புரியவில்லை. வேட்டி, சட்டை, துண்டு எல்லாம் தமிழ் அடையாளத்தைச் சொல்கின்றன. ஆனால், அவர்கள் குரலில் தமிழ் ஒலிக்கவில்லை.
கோயில் முழுவதும் வியட்நாம் மொழியில் பலகைகள் உள்ளன. ஆங்கிலமும் இருக்கிறது. தமிழ்க் கோயில் உள்ளாகத் தமிழ்மொழியின் வாடையே இல்லை.

"மாரி அம்மன் கோயில், தண்டாயுதபாணி கோயில் என இரண்டு கோயில்கள் அங்கே இருக்கின்றன. கூடவே மதுரை வீரன் சாமியும் இருக்கிறார். விநோதமான முகத் தோற்றத்தில் ஒரு விநாயகர் சிலையும் உள்ளது. இந்தக் கோயில், 19 ஆம் நூற்றாண்டில் இறுதி காலகட்டத்தில் கட்டப்பட்டுள்ளது.
மற்றொரு பகுதியில் ஸ்ரீ சுப்பிரமணியன் சுவாமி கோயில் என ஒரு முருகன் கோயில் உள்ளது. அதற்கு உள்ளாகக் காந்தி படத்தை மாட்டி வைத்திருக்கிறார்கள்.
தென்னிந்தியாவிலிருந்து வந்த தமிழர்கள்தான் இந்தக் கோயிலைக் கட்டி இருக்கிறார்கள். மொத்தம் 3 இந்து கோயில்கள் இங்கே உள்ளனர். ஹோசிமின் சிட்டியில் மட்டும் 50 தமிழ்க் குடும்பங்கள் வசிக்கின்றன.

வியட்நாமில் செட்டியார் என்ற சமூகத்தைச் சேர்ந்த ஒரு தமிழர்கள் இங்கே இருக்கிறார்களாம். அவர்கள்தான் இங்கே வந்து வணங்குவார்களாம்" என்று விளக்கம் தருகிறார் இந்த வீடியோ விலாக்கர். இவர் ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்.
இவர் மலேசியாவிலிருந்து கடந்த வாரம் வியட்நாம் சென்றுள்ளார். மலேசியாவைவிட இங்கே பொருட்கள் விலை அதிகம் என்றும் சொல்கிறார்.
அதில் வியப்பு என்னவென்றால், இந்த யூடியூபருக்கு செட்டியார் என்ற சமூகம் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. ஆனால், இந்த இளைஞர் தமிழராக இருக்கிறார். அவர் படம் பிடித்துக் காட்டும் கோயில் பலகையில் அக்கோயில் நகரத்தார் மக்களால் கட்டப்பட்டது எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1950இல் இதை அப்படியே புனரமைப்பு செய்துள்ளனர். மாற்றங்கள் எதுவும் செய்யவில்லை என்றும் பலகையில் உள்ளக் குறிப்பு தகவல் சொல்கிறது.
திருப்பதி ஏழுமலையான் தங்கக் கற்கள் பதிக்கப்பட்ட தோற்றத்தில் ஜொலிக்கிறார். அது தங்கமா எனத் தெரியவில்லை.

இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் ஊதுபத்தி ஏற்றித்தான் வழிபாடு செய்கிறார்கள். ஆனால், சிலைக்குக் கற்பூர ஆரத்திக் காட்டிதான் தமிழ் முறைப்படி அர்ச்சனை செய்கிறார் பூசாரி.

அங்கே அடிக்கப்படும் மணிகூட தமிழ்நாடு மாதிரிதான் உள்ளது. இரண்டு புறமும் உயரமான குத்து விளக்குகள்கூட உள்ளன. அர்ச்சனையின் போது சமஸ்கிருதத்திலும் தமிழிலும் வேதங்களை ஓதுகிறார்கள்.
அதில் ஆச்சரியம் என்னவென்றால் நம்ம ஊர் மதுரை வீரனைக்கூட அந்த நாட்டு மக்கள் வழிபடுகிறார்கள். கையில் அரிவாளுடன் அப்படியே நம்ம வீரன் வியட்நாமில் காட்சிதருகிறார்.

அந்த நாட்டுப் பணத்திற்கு Dong என்று பெயர். இந்தியாவில் வியட்நாம் சென்றால் குறைந்த செலவில் பயணத்தை அனுபவிக்கலாம். அங்கே நம் பணத்தின் மதிப்பு கூடுதலாக இருக்கிறது.

தெற்கு வியட்நாம் மற்றும் வடக்கு வியட்நாம் என இரண்டாக இருந்தது. அப்போது ஹோசிமின் வடக்கு வியட்நாமை ஆண்டு வந்தார். தெற்கு வியட்நாமை அமெரிக்கா ஆதிக்கம் செய்து வந்தது. அப்போது முதலாளித்துவ அமெரிக்காவை எதிர்த்து ஹோசிமின் போராடினார்.
கம்யூனிச ஆட்சியை நடத்தி வந்த ஹோசிமின் அமெரிக்க ஆதிக்கத்தை முறியடித்து வெற்றி பெற்றார். அந்தப் போரில் அமெரிக்கா விட்டுச் சென்ற விமானங்கள் பீரங்கிப் படைகள் இங்கே உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதையும் படம்பிடித்து விளக்கி உள்ளார் இந்த விலாக்கர்




-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications