பயணங்களில் நினைத்தாலே கசக்கும் மோட்டல்கள்.. பயணிகளின் பர்சையும் நலனையும் பாதுகாக்க தேவை கடிவாளம்..!
சென்னை: தரமற்ற சேவை காரணமாக விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே உள்ள மோட்டல்களில் அரசு பேருந்துகள் நின்று செல்ல போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தடை விதித்துள்ள நிலையில் , தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பயண வழி உணவகங்கள் தரமற்ற இயங்குவதாகவும் அவற்றிலும் சோதனை நடத்தி பயணிகளின் பாக்கெட்டையும் உடல் நலத்தையும் காக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் பயணம் இடைவேளைக்காக சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் பயண வழி உணவகங்களில் இறங்கி வருவது வழக்கம்.
சென்னை சாலையில் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இது போன்ற உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. நீண்ட தூர பயணம் செய்யும் பயணிகள் கண்டிப்பாக உணவு அல்லது அவசர தேவைக்காக இறங்கியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் உள்ளநிலையில் உணவக உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்ந்து அடாவடி செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இம்சை தரும் மோட்டல்கள்
இரவு நேரப் பயணங்களில் நன்கு உறங்கிக் கொண்டிருக்கும்போது போது பேருந்துகளை வாட்டர்கேனால் டம் டம்மென தட்டி பயணிகளை திடுக்கிடச் செய்வது, ஓட்டல்களில் லவுட் ஸ்பீக்கரில் அதிகபட்ச சத்தத்தை வைத்து பாடல்களை ஒளிபரப்பி பயணிகளை தூங்கவிடாமல் இம்சை செய்வது என அவர்களது அடாவடிகள் சொல்ல முடியாது. சென்னை மட்டுமல்ல கோவை செல்லும் சாலையில் திருப்பூர்-தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் மோட்டல்கள் மதுரை சாலையில் கப்பலூர் பகுதிகளில் இயங்கும் மோட்டல்கள் பழநி சாலையில் ஒட்டன்சத்திரம் பகுதியில் இயங்கும் ஓட்டல்கள் என தமிழகம் முழுவதும் இதே நிலைதான்.

தரம் குறைந்த உணவு
உணவு அல்லது அவசர தேவைக்காக இறங்க நினைக்கும் மக்கள் கொடுக்கும் காசுக்கு உண்மையான சேவையை பெறுகிறார்களா என்றால் அது பூஜ்யம் தான். முகர்ந்து கூடப் பார்க்க முடியாத உணவு வகைகள் 100 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஹைவே பயணம் ஓட்டல்களில் நடைபெறும் அக்கிரமங்களை அதிகாரிகளின் முழு ஒத்துழைப்புடன் தான் நடைபெறுகின்றன எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பிட்ட ஓட்டல்களில் தான் அரசுப் பேருந்துகளை நிறுத்த வேண்டும் என பேருந்துகளின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை போக்குவரத்து கழக அதிகாரிகள் வற்புறுத்துவதாகவும் அங்கு பேருந்து ஓட்டுனர்களுக்கு உணவு உள்ளிட்ட இத்தியாதிகள் இலவசமாக வழங்கப்படும். அந்த பணமும் பயணிகள் தலையில் கட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் உரிமையாளர்கள்.

அநியாய கொள்ளை
உதாரணத்திற்கு ஒரு பாக்கெட் பிஸ்கட் விலை 15 ரூபாய் என்று குறிப்பிட்டிருந்தால் அது 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வாயிலேயே வைக்க முடியாத ஒரு டீ பதினைந்து முதல் இருபது ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது. அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப் பட்ட பொருட்களுக்கு இந்த நிலை என்றால் போண்டா வடை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மிக அநியாயமான விலையில் தரப்படுகிறது. அதுவும் வடையில் இருந்து நூலை பிரித்து எடுத்தால் ஒரு சட்டையே தைக்கலாம் என்ற அளவுக்குத்தான் அவைகளின் தரம் இருக்கும். கொடுக்கும் காசுக்கு 20 சதவீதம் கூட பயனற்ற வகையில் இருக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட்டு விட்டால் பின்பு மீதி பயணத்தை கழிப்பது மிகப்பெரிய சாதனைதான்.

உவ்வே கழிவறைகள்
அடுத்ததாக பேருந்து பயண வழி கழிவறைகள் பேருந்து நிலையங்களில் இருக்கும் கழிவறைகளை விட மிகக் கேவலம் . இந்த பயண வழி உணவகங்கள் இருக்கும் கழிவறைகள் இருக்கின்றன என நினைத்து அவசர தேவைகளுக்கு உள்ளே சென்றால் அடுத்து அவற்றிற்குள் செல்வதை நினைத்தாலே உவ்வேதான் வரும். அப்படி செல்ல முடியாத வகையில் (அ)சுத்தம் செய்யப்பட்டு இருக்கும் கழிவறைக்களுக்கு செல்வதற்கு செல்லாமலேயே இருந்து விடலாம் என பேருந்திலேயே படுத்துக்கிடக்கும் பயணிகள் ஏராளம்.

நவீன தீண்டாமை
நவீனத் தீண்டாமையாக இதுபோன்ற பேருந்து வழி உணவகங்களில் ஆம்னி பேருந்துகளும் வால்வோ பஸ்களையும் நிறுத்துவது கிடையாது. இது ஒரு பெரிய சமூகப் பாகுபாடு இருக்கிறது எனக் கூறும் பயணிகள் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் மட்டுமே குறிவைத்து இது போன்ற இடங்களில் செயல்படும் உணவகங்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது தரமற்ற பயண வழி உணவகங்களில் அரசு பேருந்துகள் நின்று செல்ல போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பயண வழி உணவகங்களிலும் ஆய்வு நடத்தி தரமற்ற உணவு நிறுவனங்களை மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அரசே நடத்த கோரிக்கை
மேலும் மதுக்கடையை அரசு எடுத்து நடத்தும் நிலையில் தமிழக அரசின் அம்மா உணவகம் போல், நியாயவிலைக் கடைகள் நடத்தப்படுவது போல சாலையோரங்களில் பயண வழி உணவங்களை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அதே நேரத்தில் இதுபோன்ற பல உணவகங்களில் இளைஞர்களுக்கும் மகளிர் சுய உதவி குழுவினருக்கும் வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வருமானம் கிடைப்பதோடு பொதுமக்களுக்கும் பாதுகாப்பான உணவு கிடைக்கும். மலிவான விலையில் கிடைக்கும் உணவு வேண்டாம் அதே நேரத்தில் நியாயமான விலைக்கு சத்தான உணவுப் பண்டங்களையும் சரியான விலையில் குடிநீர் பிஸ்கட் குளிர்பானங்கள் பழங்கள் வழங்கவும் வழிவகுக்கும். எனவே பயண வழி உணவகங்களை மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் எடுத்து நடத்த அரசு உத்தரவிட்டால் பயணிகளின் வயிறும் மனமும் குளிரும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications