லியோ.. ஹைனாவை தேர்வு செய்தது ஏன்? விஜய்க்கும் கழுதைப் புலிக்குமான கனெக்ஷன் என்ன?
சென்னை: லியோ திரைப்படத்தில் சிங்கம், சிறுத்தையை விட்டுவிட்டு ஹைனாவை தேர்வு செய்தது ஏன் என்ற கேள்விக்கு அந்த படத்திலேயே விடை இருக்கிறது.

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. இந்த படம் அதிரடி ஆக்ஷன் படமாக இருப்பதால் அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தில் நடித்தவர்கள் அனைவருமே அவர்களுக்கு கொடுத்த கேரக்டரை சரியாக செய்துள்ளனர்.
இந்த நிலையில் படத்தின் ஆரம்ப காட்சியில் அருணாசல பிரதேசத்தில் ஹைனா அதாவது ஒரு கழுதைப்புலியானது ஊருக்குள் நுழைந்து பார்ப்போரை எல்லாம் அடிக்கும். மிகவும் ஆவேசமாக இருக்கும். அப்போது அதை அடக்குவதற்கு விஜய் வருவார்.
அவர் நண்பரும் வனச்சரகருமான கவுதம் வாசு தேவ் மேனனிடம் ஹைனா குறித்து விளக்கமளிப்பார். அதாவது இது ஸ்பாட்டட் ஹைனா. இந்த ஹைனாக்கள் கூட்டம் கூட்டமாக வாழும், ஒரு வேளை இந்த ஹைனா கூட்டத்திலிருந்து வழித்தவறி ஊருக்குள் வந்திருக்கலாம். அதனால்தான் அந்த கழுதைபுலி ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறது. இப்படி ஓடி கொண்டே இருக்கிறது என்பார்.
அதே வேளையில் ஹைனாக்கள் மிகவும் அன்பான விலங்கு என்றும் சொல்லப்படுகிறது. இதை விஜய்யும் அந்த படத்தில் சொல்வார். இந்த படத்தில் சிங்கம், சிறுத்தை, புலி என காட்டாமல் ஹைனாவை காட்டியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு அந்த படத்தில் ஒரு விஷயமானது சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது. அதாவது அருணாச்சல பிரதேசத்தில் வசித்து வரும் பார்த்திபனுக்கு (விஜய்யின் கேரக்டர் பெயர்) ஒரு கும்பலால் பிரச்சினை ஏற்பட்டு அவர்களை ஆக்ரோஷமாக கொன்றுவிடுவார்.

அதனால் அந்த கும்பல் அவரை கொல்லத் துடிக்கும். இதனால் அவர் தன் உயிரையும் தனது குடும்பத்தினரின் உயிரையும் காக்க ஓடிக் கொண்டே இருப்பார். அந்த படத்தில் கேங்ஸ்டர் லியோவாக நடிக்கும் விஜய் ஒரு சில காரணங்களுக்காக அந்த கேங்கை விட்டு வெளியே வந்து பார்த்திபனாக இருப்பார். இதனால் அவரை நிறைய கும்பல்கள் துரத்தும்.
எனவே கழுதைப்புலிகள் எப்படி அதன் கூட்டத்தை விட்டு வெளியே வந்தால் ஆக்ரோஷமாக ஓடிக் கொண்டே இருக்குமோ அது போல் கேங்கை விட்டு வெளியே வந்த லியோ படம் முழுவதும் நிற்காமல் ஓடிக் கொண்டே இருப்பார். இது ஹைனாக்களின் கேரக்டர் என்பதால் அந்த படத்தில் ஹைனாவை கொண்டு வந்தார்கள். அது போல் சிங்கம், சிறுத்தை, புலி எல்லாம் அன்புக்கு கட்டுப்படாது. ஆனால் ஹைனா அன்புக்கு கட்டுப்படுவார். அதை போல் கேங்ஸ்டராக இருக்கும் லியோ எத்தனை கொலைகள் செய்தாலும் அன்பானவர் என்பதை நாமே உருவகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
-
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
விஜய் ஜாதகத்தில் சுக்கிர திசை! 2034 வரை அசைக்க முடியாது! அண்ணாமலைக்கும் யோகம்! ஷெல்வி கணிப்பு -
செங் இஸ் கிங்.. பாஜக பாலிடிக்ஸை கையிலெடுத்த விஜய்! அலறும் கூட்டணி கட்சிகள்! கன் மாதிரி நிற்கும் தவெக -
விஜய்யின் ‘ஆபரேஷன் 12’.. நம்பி வந்தவர்களை கழற்றிவிடப்போகும் விஜய்? தவெக-வின் ரகசிய மூவ்! -
விஜய் மேஜையில் இருக்கும் 4 ஃபைல்.. 'எஸ்' சொல்வாரா.. 'நோ' சொல்வாரா? கோட்டையில் அரங்கேறும் க்ளைமாக்ஸ் -
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
‘குடும்பம் முக்கியம் என்பதை நீங்க காட்டணும்’.. பதவியேற்பில் நடந்த சம்பவம்.. முதல்வர் விஜய்க்கு சமுத்திரக்கனி அறிவுரை -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
நான் அரசியல்ல 15 வருஷமா இருக்கேன்! என்ன யூஸ்? விஜய் மீது பொறாமையா இருக்கு! ஓபனாக சொன்ன பவன் கல்யாண் -
ஆட்சிக்கு வந்த 15வது நாளிலேயே.. விஜய்யின் ஆபரேஷன் விசில்! பாஜக ஸ்டைல்! தூக்கப்பட்ட அதிமுக MLAக்கள் -
“திமுக உதவியுடன் ஆட்சி!” எடப்பாடி பழனிசாமியின் கேம்.. தவெகவில் இணைய காரணத்தை சொன்ன எம்எல்ஏக்கள் -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி!












Click it and Unblock the Notifications