நிலைமை ரொம்ப மோசம்.. ஸ்டாலின் கண்டுக்கிறதே இல்லை.. திமுகவில் வெடிக்கும் பகீர்!
திமுகவுக்குள் உட்கட்சி பூசல் வெடித்து கிளம்பி வருகிறது
சென்னை: "உதயநிதிக்கு இப்போ சீட் தர வேண்டுமா? இதென்ன மக்கள் ஆட்சியா? மன்னர் ஆட்சியா?" என்று திமுக தொண்டர்களில் சிலர் கொந்தளித்து கேட்கின்றனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது.. அதில் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குதான் கட்சிக்குள் அதிருப்தி வெடித்துள்ளது.
திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலில், வாரிசுகளுக்கு மட்டுமே அதிக இடங்கள் ஒதுகப்பட்டுள்ளதாக அக்கட்சி தொண்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்... புது முகங்களுக்கு வாய்ப்பு ஏன் மறுக்கப்படுகிறது என்றும், 3 தலைமுறையாக ஒரே குடும்பத்திற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு கொண்டே இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்றன.

உதயநிதி
இதற்கு முதல் சான்று உதயநிதி ஸ்டாலின், கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்கிற ஒரே காரணத்தால் சுலபமாக 3வது வாரிசுக்கு,அதுவும் தலைநகரில் உள்ள சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட சுலபமாக வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், பல தலைவர்களுக்கு இதில் உடன்பாடு இல்லை.. வேறு வழியில்லாமல் பல்லை கடித்து கொண்டிருக்கிறார்கள் என்றும் முணுமுணுப்புகள் வருகின்றன.

வாய்ப்பு
அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே போட்டியிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கே அதிகம் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.. குடும்ப கட்சி என்று ஏற்கனவே எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் இப்போது, வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் லிஸ்ட் அதை நிரூபிக்கும் வகையில் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரியசாமி
கடந்த தேர்தலில் டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி ராஜாவுக்கு சீட் தந்தார்கள்.. இந்த முறையும் இப்போது சீட் தரப்பட்டுள்ளது.. அதேபோல, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் அவரது மகன் ஐ.பி. செந்தில்குமாருக்கு பழனி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது... ஒரே குடும்பத்தில் 2 பேருக்கு வாய்ப்புகள் தந்திருப்பது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வேட்பாளர்கள்
அதுபோலவே, சேலம் மாவட்டத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வருனுக்கும், இதேபோல், அன்பில் மகேஷ், ஆலடி அருணா, தங்கம் தென்னரசு ஆகிய 2ம் தலைமுறை வாரிசுகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இப்படி, முதல் தலைமுறை, இரண்டாம் தலைமுறை தாண்டி மூன்றாம் தலைமுறையாக வாழையடி வாழையாக திமுகவின் சிற்றரசர்களாக உலா வரும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் ஆகியோருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

கருணாநிதி
அதாவது இந்த வேட்பாளர்கள் லிஸ்ட் மூலம் திமுக என்பது வாரிசுகளின் கோட்டை என்பது மறுபடியும் நிரூபணமாகி உள்ளதாக திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். "கலைஞர் இருந்தபோதுகூட இப்படி நடக்கவில்லை.. இப்பதான் ரொம்ப நிலைமை மோசமாகிவிட்டது, இதையெல்லாம் எடுத்து சொன்னால், ஸ்டாலின் கண்டுகொள்வதே இல்லை" என்று குமுறல்களும் திமுகவுக்குள் வெடித்து கிளம்பி வருகின்றன...!
-
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்!












Click it and Unblock the Notifications