தீரன் பார்ட் 2..? சத்தியமங்கலம் காட்டுக்குள் பவாரியா கொள்ளையர் ஊடுருவல்! புலி வேட்டை! வனத்துறை தகவல்
சென்னை: ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள் சம்பந்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல் துறை பதில் அளித்துள்ளது.
சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள் வேட்டையாடப்பட்டது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு வனத்துறை தரப்பில் புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியை மகாராஷ்டிரா போலீஸார் கைது செய்துள்ளனர் என தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மும்பையில் கைதான நபரை தமிழக போலீஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பதில் அளித்தனர்.
இதையடுத்து இந்த வழக்கை நவம்பர் 8-ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். யானைகள் வேட்டை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவ முன்னாள் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் காணொலி மூலம் நவம்பர் 8 இல் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கேரள வனப்பகுதியில் ரயில்களில் அடிபட்டு யானைகள் பலியாவதை தடுப்பது தொடர்பான வழக்கில் ஏற்கெனவே ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாதையை யானைகள் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. எனவே அந்த பகுதியில் எந்தெந்த பகுதியில் கூடுதலாக சுரங்கப்பாதைகள் அமைக்கலாம் என்பது குறித்து தமிழக- கேரள வனத்துறை அதிகாரிகளும் ரயில்வே அதிகாரிகளும் இணைந்து ஆய்வு செய்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சத்தியமங்கலத்தில் 5 புலிகள் வேட்டையாடப்பட்ட வழக்கில் ராஜஸ்தானை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். மேலும் புலிகள் வேட்டையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள், புலித் தோல், பல், நகம் யாருக்கு விற்கப்பட்டன, இதில் சர்வதேச தொடர்பு இருக்கிறதா என்றெல்லாம் நீதிபதிகள் கேள்வி எழுப்பிய போதுதான் இந்த விவகாரத்தில் பவாரியா கொள்ளையர்களுக்கு தொடர்பிருப்பதாக தெரிவித்தனர்.
பவாரியா கொள்ளையர்கள் கூர்மையான ஆயுதங்களை கொண்டு மக்களை தாக்கி கொள்ளையடிப்பது வழக்கம். இவர்கள் பெரும்பாலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்கள் தென்தமிழகத்தை குறி வைத்து கொள்ளையடிக்கிறார்கள். அதிலும் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள வீடுகளையே இவர்கள் குறி வைக்கிறார்கள். தற்போது இவர்களின் பார்வை புலிகளின் பக்கம் திரும்பியுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications