அடித்து உதைச்சு கைது செய்தா எப்படி? செங்கோலால் தமிழகத்துக்கு பெருமையா? பாயிண்டை பிடித்த ஸ்டாலின்
சென்னை: சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னை திரும்பினார். அப்போது அவர் நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டு இருப்பது தமிழ்நாட்டுக்கு பெருமையா? என்பது தொடர்பாக அவர் வரலாற்று அறிஞர்களை நினைவுக்கூறி கருத்து தெரிவித்தார்.
புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாகவும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 9 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் சென்றார். இந்த சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு நேற்று அவர் சென்னை திரும்பினார்.

அவருக்கு திமுக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இரவு 10.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.
அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ‛‛புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்துள்ளார்கள். அது தமிழ்நாட்டுக்கு பெருமை என சொல்கிறார்களே'' என்ற கேள்வியை எழுப்பினார். இதற்கு ஸ்டாலின், ‛‛அது உண்மையான செங்கோலாக இருந்தால் தமிழ்நாட்டுக்கு பெருமை. ஆனால் அது அப்படியானதாக இல்லை என சில வரலாற்று அறிஞர்களே சொல்லி இருக்கிறார்கள்.
சோழர்களுக்கும், செங்கோலுக்கும் தொடர்பு இல்லை என அவர்கள் கூறி உள்ளனர். செங்கோல் நிறுவிய தினத்திலேயே அது வளைந்துவிட்டது. அதற்கு உதாரணம் தான் இந்தியாவுக்கு பதக்கங்களுடன் புகழ் வாங்கி கொடுத்த மல்யுத்த வீராங்கணைகளை அடித்து உதைத்து கைது செய்தது தான் சாட்சியாக அமைந்துள்ளது'' என்றார்.
இதையடுத்து இன்னொரு நிருபர், ‛‛செங்கோல் தொடர்பான நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றாரே?'' என கேள்வி எழுப்பினார். இதற்கு ஸ்டாலின், ‛‛மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் கலந்துரையாடல் என்று கூறியதால் தான் அவர் அங்கு சென்றார். குடியரசு தலைவர் தான் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைக்க வேண்டும் என்பதை அவர் அங்கு கூறிவிட்டு வந்துள்ளார்'' என்றார்.
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட செங்கோல் லோக்சபாவில் சபாநாயகர் இருக்கையின் அருகே நிறுவப்பட்டது. இந்த செங்கோல் என்பது ஆங்கிலேயர் ஆட்சி மாற்றத்தை குறிக்கும் வகையில் மவுண்ட் பேட்டன், அப்போதைய பிரதமர் நேருவிடம் வழங்கினார். இந்த செங்கோல் திருவாவடூதுறை ஆதினம் மூலம் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டது. நீதி தவறாமல் ஆட்சி செய்வதை குறிக்கும் வகையில் இந்த செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது. மேலும் இந்த செங்கோல் சோழ செங்கோல் என கூறப்பட்ட நிலையில் தான் ஸ்டாலின் இப்படி கூறியுள்ளார்.
மேலும் புதிய நாடாளுமன்றம் திறந்த மே 28 ம் தேதி பாலியல் தொல்லை வழக்கில் பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யக்கோரி மல்யுத்த வீரர்கள் டெல்லியில் பேரணி சென்றனர். அவர்களை போலீசார் தரதரவென இழுத்து கைது செய்தனர். அதனை குறிப்பிட்டு தான் செங்கோல் முதல் நாளிலேயே வளைந்துவிட்டது என முதல்வர் ஸ்டாலின் தாக்கி பேசியுள்ளார்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications