சமகாலத்தில் ஓ பன்னீர்செல்வம் போல் கடுமையான விமர்சனத்துக்குள்ளான அரசியல்வாதி யாருமே இல்லை.. ஏன்?
சென்னை: சம காலத்தில் ஓ பன்னீர்செல்வம் போல் கடுமையான விமர்சனத்துக்குள்ளான அரசியல்வாதி யாருமே இல்லை.. சமூக வலைதளங்களில் ஓ பன்னீர்செல்வத்தின் பேட்டி, ஓ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் எம்பி அளித்த பேட்டி மற்றும் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பண்ருட்டியார் அளித்த பேட்டி போன்றவற்றை பார்த்தாலே புரியும்.
தமிழ்நாட்டு அரசியலில் ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் நம்பர் 2 என்கிற அளவில் ஓ பன்னீர்செல்வம் இருந்தார்.. ஜெயலலிதாவால் இரண்டு முறை முதல்வராக்கப்பட்டார்.ஜெயலலிதா மறைந்த பின்னர் 3வது முறையாக முதல்வராக்கப்பட்டார். ஆனால் அந்த பதவி நீண்ட நாள் அவருக்கு நீடிக்கவில்லை.. சசிகலாவிற்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தவர்... அதன்பிறகு சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உள்பட அவரது குடும்பத்தை அதிமுகவில் இருந்து வெளியேற்ற தர்மயுத்தம் நடத்தினார்.

அப்போது அவரது பின்னால் பாஜக இருந்ததாக பேசப்பட்டது. அதிமுக இரண்டாக உடைந்தது. இதனால் சசிகலாவால் முதல்வராக முடியாத நிலை ஏற்பட்டது. இதனிடையே அடுத்த சில நாளில், சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்து சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே முதல்வராக முடியாததால், தனக்கு பதிலாக எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார் சசிகலா. எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின்னர், ஓ பன்னீர்செல்வம் சில மாதங்களில் அதிமுகவில் இணைந்தார்.
இருவரும் சேர்ந்து அதிமுகவின் கட்சி விதிகளை எல்லாம் மாற்றினார்கள்.. அப்போது அதிமுக பொதுச்செயலாளராக இருந்த சசிகலாவை நீக்கினார்கள்.. துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரனை நீக்கினார்கள்.. கட்சியில் ஒருங்கிணைப்பாளர் என்கிற நிலையை ஓபிஎஸ் பெற்றார். ஆட்சியில் துணை முதல்வரானார்.. அதேபோல் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகினார்.. ஆட்சியில் முதல்வராகவே நீடித்தார்.
4 வருட ஆட்சியில் சமார்த்தியமாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி, கட்சிக்குள் தனக்கான ஆதரவு வட்டத்தை அதிகரித்தார். முழுமையாக தனது கட்டுப்பாட்டிற்கு அதிமுகவையும் கொண்டு வந்தார். ஆனால் இதை சுதாரிக்காத ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் சிக்கலை சந்தித்தார். 2021 தேர்தலில் தனக்கான ஆதரவாளர்களுக்கு சீட் பெற முடியாமல் தவித்தார். இறுதியாக ஓ பன்னீர்செல்வமே தனது சொந்த மாவட்ட தொகுதியான போடியில் போராடித்தான் வென்றார்.
2021ல் ஆட்சி பறிபோனாலும் எதிர்க்கட்சி துணை தலைவராக இருந்த ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக அதிமுகவில் பிரச்சனை வெடித்தது. குறிப்பாக ஒற்றை தலைமை பிரச்சனை வெடித்தது... அதற்கு ஓபிஎஸ் உடன்படாததால், கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், நீதிமன்றங்களை நாடினார். ஆனால் எதுவும் அவருக்கு சாதகமாகவில்லை.. எல்லா தீர்ப்புகளும் எதிராகவே அமைந்துள்ளது.
இதனிடையே யாரை எதிர்த்து தர்ம யுத்தம் நடத்தினரோ அவர்களுடனே கடைசியில் சேர்ந்தார் ஓபிஎஸ்.. சசிகலா, டிடிவி தினகரனுடன் நெருக்கமான ஓபிஎஸ், பாஜக உடனும் நெருக்கம் காட்டி வந்தார்.. ஆனால் அதிமுகவின் 90 சதவீதம் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்ததால், பாஜக அவர் பக்கம் சேர்ந்தது. ஓபிஎஸ்சை கண்டுகொள்ளவில்லை.. இதுஒருபுறம் எனில், அதிமுகவில் பிரச்சனைகள் எல்லாம் முடிந்த பின்னர், அதிரடியாக பாஜக கூட்டணியில் இருந்து விலகினார்..
அண்ணாமலை ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த போதும் சரி, அண்ணாவை விமர்சித்த போதும், ஓ பன்னீர்செல்வம் பெரிய எதிர்வினை ஆற்றவில்லை என்று குற்றம்சாட்டும் அதிமுகவினர்.. அவரது சமீபகால செயல்களை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சிக்கிறார்கள்... இதுபற்றி அதிமுகவினர் கூறும் போது, பாஜக இதுவரை சிறிய கட்சிகளை கூட கூட்டணியில் அழைத்து பேசி வருகிறது. அமமுக, பாமக, தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க பேசி வருகிறது..
ஆனால் இதுவரை ஓ பன்னீர்செல்வத்தை கூட்டணிக்கு அழைக்காத நிலையில் இவரே வழிய போய் கூட்டணியில் தொடர்வாக கூறி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பல்லடம் கூட்டத்தில் கூட ஓ பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.. ஜிகேவாசனை விரும்பி அழைத்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய அண்ணாமலை இதுவரை கூட்டணியில் தொடர்கிறோம் என்று கூறி வரும் ஓ பன்னீர்செல்வத்தை அழைக்கவில்லையே.. இவர் ஏன் அழையா விருந்தாளியாக செல்கிறார் என்று அதிமுகவினர் விமர்சிக்கிறார்கள்.
அண்மையில் பேசிய நடிகை விந்தியா, பாஜக ஆபிஸில் தோட்ட வேலைக்கு கூப்பிட்டால் கூட ஓ பன்னீர்செல்வம் உடனே போவார் என்று கடுமையாக விமர்சித்தார். இதேபோல் அண்மையில் ஓபிஎஸ் மகன் ரவீந்திராத் குமாரை தாமரையில் போட்டியா என்று கிண்டல் செய்து அதிமுகவினர் விமர்சித்தனர். இது ஒருபுறம் எனில், அண்மையில் சட்டசபையில் ஓபிஎஸ்சின் இருக்கையும் மாற்றப்பட்டது. தொடர்ந்து பாஜக ஆதரவாளர் போல் செயல்பட்டு வந்த காரணத்தால் திமுக இவரது சீட்டை மாற்ற எடப்பாடிக்கு பச்சைக்கொடி காட்டியதாகவும் பேசப்பட்டது.
இதனிடையே ஓ பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திரமோடி செல்லும் இடம் எல்லாம் புகழ்ந்து வருகிறார். இதனால் கடுப்பான அதிமுகவினர் ஓபிஎஸ் மற்றும் அவரது மகனை மிக கடுமையாக விமர்சிக்க தொடங்கி உள்ளனர். சமூக வலைதளங்களில் இவரை பற்றி பேட்டிகளில் பார்த்தாலே விமர்சனங்கள் தெரியும்.. இதற்கு பேசாமல் பாஜகவில் ஓ பன்னீர்செல்வம் சேர்ந்துவிடலாம் என்று அதிமுகவினர் விமர்சித்து வருகிறார்கள். சமகாலத்தில் ஓ பன்னீர்செல்வம் போல் விமர்சனங்களை சந்தித்த ஒரு அரசியல் தலைவர் யாருமே இல்லை என்கிறார்கள் மூத்த பத்திரிக்கையாளர்கள்...
இதனிடையே அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ பன்னீர்செல்வம்.. "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சமயத்தில் மட்டும்தான் இரட்டை இலை சின்னம் பழனிசாமிக்கு வழங்கப்பட்டது. அதுவும் நாங்கள் வழக்கை வாபஸ் பெற்றதால் எடப்பாடிக்கு கிடைத்தது. அது தொடர்பான வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. 1989-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற தொகுதி அது. அதில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோற்றுள்ளது. இதன் மூலம், பழனிசாமியை மக்கள் ஏற்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது. மக்களவை தேர்தலில் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம். விரைவில் விருப்பமனு பெறப்படும் என்று கூறினார்.
-
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications