Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேளாண் பட்ஜெட்டில் எதுவுமில்லை..விவசாயிகள் ஏமாற்றம்..எடப்பாடி பழனிச்சாமி கடும் தாக்கு

நெல் விவசாயிகள், கரும்பு விவசாயிகளை வேளாண் பட்ஜெட் ஏமாற்றமடையச் செய்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை கைவிட்டு விட்டனர். நெல் விவசாயிகள், கரும்பு விவசாயிகளை வேளாண் பட்ஜெட் ஏமாற்றமடையச் செய்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை இன்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக பல்வேறு விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன.

There is nothing in the agriculture budget Farmers are disappointed says Edappadi Palanisami

அதன் அடிப்படையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு சட்டசபையில் தாக்கல் செய்வதாக வேளாண்மைத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

இந்த வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். கரும்பு, நெல் விவசாயிகளை இந்த பட்ஜெட் ஏமாற்றமடையச் செய்துள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

கரும்புக்கு ஒரு மெட்ரிக் டன்னிற்கு ரூ.195 மட்டுமே ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரும்புக்கு ஆதார விலையாக ரூ.4000 கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய நிலுவைத்தொகை பற்றி வேளாண் பட்ஜெட்டில் எதுவும் அறிவிக்கவில்லை.

There is nothing in the agriculture budget Farmers are disappointed says Edappadi Palanisami

விவசாயிகளை ஏமாற்றுகிற அரசாங்கமாகத்தான் இருக்கிறது. அதிமுக ஆட்சி காலத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் அதிக அளவில் இழப்பீடு பெற்றுத்தரப்பட்டது. நெற்பயிர்கள் கனமழையால் மூழ்கின. விவசாயிகள் கண்ணீர் விட்டனர். விவசாயிகள் கட்டிய காப்பீட்டு பிரீமிய தொகையை கூட இந்த அரசாங்கத்தினால் தர முடியவில்லை.

நெல் விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தார்கள். நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2500 கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். அது பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

நெல் கொள்முதல் நிலையங்களில் உடனடியாக கொள்முதல் செய்வதில்லை. நெல் கொள்முதல் நிலையங்களில் மழை காலங்களில் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. தமிழக அரசு தார்பாய்களை வழங்காததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

There is nothing in the agriculture budget Farmers are disappointed says Edappadi Palanisami

காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அது கண்டனத்திற்கு உரியது. வேளாண் மானியக்கோரிக்கையில் உள்ளனவற்றை பட்ஜெட்டாக வாசித்துள்ளனர் என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

தை பொங்கல் நாளில் கரும்பு கொள்முதல் செய்யாமல் கண்ணீர் விட வைத்தனர். விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். நான் அறிக்கை விட்ட பின்னர்தான் கரும்பு கொள்முதல் செய்வதாக அறிவித்தனர். விவசாயிகள் பாதிக்கப்படுவதை இந்த அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+