சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை

Google Oneindia Tamil News

சென்னை: அரசியலில் எதிர் கருத்து தெரிவிப்பவர்களை கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, அவர்கள் வருவதால், டிவியை உடைக்க கூடாது என்று கமல்ஹாசன் குறித்து தமிழிசை விமர்சித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பாஜகவிற்கு எதிரான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறும் குற்றச்சாட்டு தவறு என தெரிவித்தார்.

There may be conflict with the comments, Do not break the TV says Tamilisai

தூத்துக்குடியில் தாமரை மலர்ந்தே தீரும் என்றும், தேர்தல் ஏற்பாடுகள் நன்றாக இருந்ததாகவும் தெரிவித்த அவர், தேர்தலுக்கு முன் பணப்பட்டுவாடாவை தடுத்திருக்கலாம் என்றார். வாக்கு மையத்தில் குளறுபடி என்பது அடிப்படை ஆதாரம் இல்லாத உண்மை, திமுகவினர் தோல்வி பயத்தில் உளறுகிறார்கள் என்றும் கூறினார்.

சட்டப்பேரவை தேர்தல் வரட்டும் வருகிறேன் என்று ரஜினி தெரிவித்துள்ளார், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று வரவேற்பு தெரிவித்த தமிழிசை, அரசியலில் எல்லா தலைவர்களையும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்காக மற்ற தலைவர்கள் வரும், டிவியை உடைக்ககூடாது எனவும் பேசினார்.

கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு

மேலும், ஸ்டாலின் தூத்துக்குடியில் பேசும் போது, தோற்று போவதற்கு தமிழிசை இங்கு வந்தாரா என்கிறார், அப்போது, கனிமொழியும், கீதாஜீவனும் ஏளனமாக சிரிக்கிறார்கள். கனிமொழியை பற்றி தவறாக டிவிட்டரில் பதிவிட்ட கருத்திற்கு நான் கண்டனம் தெரிவித்தேன். பெண் தலைவர்களை பற்றி பேசியதற்கும் நான் எதிர்ப்பு தெரிவித்துள்ளேன். நான் யாரையும் தரக்குறைவாக கனிமொழி சொல்வது போல் பேசியதில்லை என்றும் விளக்கமளித்தார்.

English summary
tamilisai Said that There may be conflict with the comments, Do not break the TV
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X