#Exclusive தமிழிசை மாநில தலைவரா இருந்தப்போ கட்சில சேர ஆளே வரல.. சூட்டை கிளப்பிவிடும் திருச்சி சூர்யா
சென்னை: தமிழிசை சௌந்தரராஜன் பாஜக மாநில தலைவராக இருந்தபோது, கட்சியில் சேர்வதற்கே ஆள் இல்லை என அண்ணாமலை ஆதரவாளரான பாஜக மாநில நிர்வாகி திருச்சி சூர்யா "ஒன் இந்தியா" தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்ற நிகழ்வில் பிரதமர் மோடி அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, தமிழிசை சவுந்திர ராஜன் மேடைக்கு வந்து அமித் ஷாவுக்கு வணக்கம் தெரிவித்தார். அவரை அழைத்து கோபமாக கண்டித்தார் அமித் ஷா. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது.

தமிழிசையை கண்டித்த அமித் ஷா: தென் சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தமிழிசை சவுந்தரராஜன் அண்மைக்காலமாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். அவருக்கு எதிராக பேசி வருவதுடன் அண்ணாமலை வைத்திருக்கும் வார்ரூம் ஆட்களுக்கு கடும் எச்சரிக்கையையும் கொடுத்தார்.
இதனால், தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி பூசல் வெட்ட வெளிச்சமானது. தமிழிசைக்கு ஆதரவாக ஒரு தரப்பினர் திரள, அண்ணாமலை தரப்பு இந்த விஷயத்தை டெல்லி தலைமையின் கவனத்துக்கு எடுத்துச் சென்றது. இதன் காரணமாகத்தான் தமிழிசையை பார்த்தையும் தன்னுடைய கோபத்தை நேரடியாகவே காட்டியிருக்கிறார் அமித் ஷா எனக் கூறப்படுகிறது.
திருச்சி சூர்யா பேட்டி: இந்நிலையில், அண்ணாமலை ஆதரவாளரும், பாஜக பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில நிர்வாகியுமான திருச்சி சூர்யா ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். இவர் தமிழிசைக்கு எதிராக பதிவிட்ட ட்வீட்டுகள் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இனி அவரது பேட்டி:
திருச்சி சூர்யா: அதிமுக உடன் கூட்டணியில் இருக்க வேண்டும் என பாஜக மேலிடம் விரும்பவில்லை. பாஜக உடன் கூட்டணி சேர்ந்ததால் சிறுபான்மையினர் ஓட்டு அதிமுகவுக்கு கிடைக்கவில்லை என அக்கட்சி தலைவர்கள் பேசிய கருத்து மேலிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால், அதிமுகவுடன் கூட்டணி தொடர்வதை மேலிடமே விரும்பவில்லை. எனவே, அது அண்ணாமலை தன்னிச்சையாக எடுத்த முடிவு அல்ல.

தமிழிசை ஜெயித்திருக்க மாட்டார்: தென் சென்னை லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அதிமுக வேட்பாளர் பெற்ற வாக்குகளை சேர்த்தால் கூட, திமுக வேட்பாளர் அதை விட அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார். ஆக, கூட்டணி அமைத்திருந்தாலும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு வெற்றி கிடைத்திருக்காது.
இந்த தேர்தலில் பாஜக ஒரு பெரிய சாதனை புரிந்திருக்கிறது. 13 இடங்களில் இரண்டாம் இடத்திற்கு வந்திருக்கிறது. திமுக vs பாஜக தான் தமிழ்நாடு அரசியல் களம் என மாறி இருக்கிறது. இப்படி பெருமைப்படும் விஷயம் இருக்கும்போது, அதை விட்டுவிட்டு, தேசிய தலைமை முடிவை மீறி முன்னாள் மாநில தலைவர் வார்த்தைகளை பிரயோகித்துள்ளார்.
அண்ணாமலை பாஜக மாநில தலைவரான பிறகு, குற்றப் பின்னணி கொண்டவர்களை பாஜகவில் சேர்த்தார் என வெளிப்படையாக சொல்லட்டும். ஒருவரை கூட அவர் நேரடியாக சேர்க்கவில்லை. அவருக்கு முன்னாள் இருந்த மாநில தலைவர்களால் கட்சியில் சேர்க்கப்பட்டவர்கள் ஆங்காங்கே பதவிக்கு வந்திருக்கலாமே தவிர அண்ணாமலை யாரையும் கட்சியில் சேர்த்து பதவி கொடுக்கவில்லை.
கேள்வி: அமித் ஷா, தமிழிசையை கண்டிப்பது போன்ற வீடியோவை அண்ணாமலை ஆதரவாளர்கள் பரப்பி வருகின்றனர். அண்ணாமலை vs தமிழிசை என மோதல் வெளிப்படையாகவே ஏற்பட்டுள்ளதா?
திருச்சி சூர்யா: உண்மையிலேயே இங்கு உள்ள பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் அண்ணாமலைக்காகவே இருந்தாக வேண்டும். ஏனென்றால் தமிழ்நாடு பாஜகவின் "பாஸ்" அவர் தான். வார் ரூம் என்பது அண்ணாமலை தனியாக தனக்கு ஆதரவாக சண்டை போடுவதற்காக வைத்துக்கொண்ட டீம் கிடையாது. ஒரு மாநில தலைவரை மனதார ஏற்று நாங்கள் செயல்படும்போது, அவரை எதிர்த்து யார் பேசினாலும் நாங்கள் எதிர்வினை ஆற்றித்தான் தீருவோம்.
ஒரு ஆட்டின் தலையில் அண்ணாமலை படத்தை மாட்டி, நடு ரோட்டில் ஆட்டின் தலையை வெட்டுகிறார்கள். ஆட்டின் கழுத்தில் இருந்து வடியும் ரத்தம் அண்ணாமலை படத்தில் தெறிக்கிறது. இது ரொம்பக் கொடூரமான விஷயம். பத்திரிகையாளர் சந்திப்பில் இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கலாமே? ஆனால் அதையெல்லாம் பேச மறுக்கிறார் தமிழிசை. அப்படி இருக்கும்போது கட்சியின் உண்மையான விசுவாசிகள் அவருக்கு பதில் கொடுக்கத்தான் செய்வோம்.
அண்ணாமலை தலையில்: திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு கூட்டத்தில், குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர்கள் பாஜகவில் உள்ளனர் என ஒரு 16 பேர் கொண்ட பட்டியலை வாசித்தார். அவர்கள் பாஜகவில் சேர்க்கப்பட்டது எல்.முருகன், மாநில தலைவராக இருந்த கால கட்டத்தில் தான். தமிழிசை மாநில தலைவராக இருந்தபோது கட்சியில் சேர்வதற்கு கூட யாரும் தயாராக இல்லை. எல்.முருகன் காலத்தில், குற்றப் பின்னணி இருந்தாலும் திருந்தி வருபவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்.
அண்ணாமலை வந்த பிறகு குற்றப் பின்னணி கொண்டவர்கள் யாரும் கட்சியில் சேர்க்கப்படவில்லை எனும்போது அதையும் கொண்டு வந்து அண்ணாமலை மீது சுமத்துவது ஏன் என்பது தான் எங்கள் கேள்வி.
2027 வரை அண்ணாமலை தான் தலைவர்: மாநில தலைவர் பதவியை தனக்கு கொடுக்காமல் அண்ணாமலைக்கு கொடுத்துவிட்டார்கள் என்ற கோபத்தில் தொடர்ச்சியாக குறை சொல்வதை ஏற்க முடியாது. கல்யாண ராமன் கட்சியில் எந்த தீவிர செயல்பாட்டிலும் இல்லை. அவர் சொல்வதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
2027 வரை தமிழ்நாட்டின் பாஜக தலைவராக அண்ணாமலை தொடர்வார். 2026ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அண்ணாமலை வருவார். இன்று இவர்களுக்கு இடையே உள்ள கருத்து விவாதங்கள் பெரிய அளவுக்குப் போகாது. இத்துடன் முடிவடைந்து விடும்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications