நாளை தொங்கு நாடாளுமன்றம் உருவானால்.. கிங் மேக்கர் ஆக போவது இந்த 3 கட்சிகள்தான்.. முக்கியம்!
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் யாரெல்லாம் கிங் மேக்கர்களாக மாறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் நெருங்கி வருகின்றன. தேர்தல் முடிந்த நிலையில் நாளை வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில் லோக்சபா தேர்தல் தொடர்பான எக்சிட் போல் முடிவுகள் நேற்று முதல்நாள் வெளியாகின. 2024 லோக்சபா தேர்தலில் பாஜக பெரும்பாலும் 300+ இடங்களை வெல்லும் என்று தேர்தல் கணிப்புகள் சொல்கின்றன. சில கணிப்புகள் என்டிஏ கூட்டணிக்கு 370 இடங்கள் கூட கிடைக்கும் என்று கணித்து உள்ளன.

ஆனால் 2024ல் ஒருவேளை மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் போன்றவை கிங் மேக்கர்களாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.
கூட்டணியில் இல்லாத கட்சிகள்: தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எனப்படும் பாரதிய ராஷ்திரிய சமிதி, ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இரண்டுமே பாஜக, இந்தியா கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆகும். இரண்டுமே தெலுங்கானா, ஆந்திராவில் முறையே வலிமையாக உள்ள கட்சிகள் ஆகும். இவை அணி சேராத கட்சிகள் என்பதால் இந்த கட்சிகள் கிங் மேக்கர்களாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.
மெஜாரிட்டி: பாஜகவின் என்டிஏ கூட்டணி, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் பாரதிய ராஷ்திரிய சமிதி, ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகியவை ஆதரவு கொடுக்கும் கட்சிகள்தான் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படும். இப்போது வரும் தேர்தல் ரிப்போர்டுகள் சில தொங்கு நாடாளுமன்றம் உருவாக்கலாம் என்று கூறுவதால் இந்த அணி சேராத கட்சிகள் எங்கே செல்லும் என்பதை வைத்தே முடிவுகள் மாறும்.
வரலாறு என்ன?: அணி சேராத கட்சிகள் கொண்ட ஆந்திரா, ஒடிசா, தெலுங்கானாவில் நடந்த 2019 தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (BJP) 42 இடங்களையும், காங்கிரஸ் 6 இடங்களையும், YSR காங்கிரஸ் கட்சி (YSRCP) 22 இடங்களையும் பெற்றன.
கூட்டணி படி பார்த்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 49 இடங்களையும், இந்திய கூட்டணி 8 இடங்களையும், ஒய்எஸ்ஆர்சிபி, பிஜு ஜனதா தளம் (பிஜேடி), திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) போன்ற அணி சேராத கட்சிகள் எனப்படும் பிராந்திய கட்சிகள் கூட்டாக 39 இடங்களைப் பெற்றன.
ஒடிசா, மேற்கு வங்கம், தெலுங்கானா , ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் 2019ல் NDA வெற்றி பெற்ற இடங்களில் 53% வாக்குகளைப் பெற்றது. இந்திய கூட்டணி 45% மற்றும் அணிசேராக் கட்சிகள் 48% வாக்குகளைப் பெற்றன. அணிசேராக் கட்சிகள் பெற்ற 8% வாக்குகள்தான் தொங்கு சட்டசபை உருவாகும் பட்சத்தில் முடிவுகளை தீர்மானிக்க போகின்றன.
அணிசேரா கட்சிகள் போட்டியிடும் இடங்கள்: 2019 ஆம் ஆண்டில், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் பாஜக 10% வாக்கு சதவிகிதத்திற்கும் குறைவான வித்தியாசத்தில்தான் 14 இடங்களைப் பெற்றது, அதே நேரத்தில் 10% வாக்கு சதவிகிதத்திற்கும் அதிகமான வித்தியாசத்தில் 28 இடங்களை வென்றது.
டிஎம்சி இந்தியா கூட்டணியின் ஒரு பகுதியாக இருப்பதாகக் கூறிக்கொண்டாலும், மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் எந்த ஒப்பந்தத்திலும் இல்லாதது அதை அணிசேராது என்று வைத்துக்கொள்ளப்படும். தேர்தல் முடிந்த பின் இவர்கள் கூட்டணி வைக்கலாம்.
பாஜகவின் என்டிஏ கூட்டணி, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் பாரதிய ராஷ்திரிய சமிதி, ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகியவை ஆதரவு கொடுக்கும் கட்சிகள்தான் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படும். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியையும் சேர்ந்து இந்த கட்சிகள்தான் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்க போகின்றன.
இதில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி பாஜகவிற்கும், காங்கிரசுக்கும் எதிராக உள்ளது. தெலுங்கானா ஆட்சி மாற்றம் காரணமாக பிஆர்எஸ் காங்கிரசை கொஞ்சம் கூடுதலாக எதிர்க்கிறது. YSRCP பாஜகவுடன் கொஞ்சம் நட்பாக உள்ளது. பிஜு ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ் ஆகியவை பாஜகவை தீவிரமாக எதிர்த்து வருகின்றன. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வந்த பின் இந்த அணி சேர கட்சிகளின் முடிவுதான் மோடியின் ஹாட் ட்ரிக் கனவை தீர்மானிக்கும்!
-
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்











Click it and Unblock the Notifications