இன்று இந்த "பெல்ட்" ரொம்ப கவனமா இருக்கணும்.. எச்சரிக்கும் "சாட்டிலைட்".. அதி கனமழையாமே.. இதை பாருங்க
சென்னை: தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய கணிப்புகள் தெரிவிக்கின்றன.
நேற்று முதல்நாள் வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து உள்ளது. இன்று தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் சற்றே வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி 10-12 தேதிகளில் நகரக்கூடும். இதனால் தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்து வருகிறது. இன்று திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

கணிப்பு
இது தொடர்பாக சென்னை ரெயின்ஸ் (www.chennairains.com) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இலங்கையில் கடல்பகுதியில் ஏற்பட்டு உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நன்றாக வலுவடைந்து உள்ளதாக சாட்டிலைட் புகைப்படங்கள் காட்டுகின்றன. இது தற்போது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.

சாட்டிலைட்
இதன் காரணமாக நேற்று மாலையில் இருந்து சென்னை, மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை மைய அறிக்கைபடி இன்று அதிகாலை 5.30 மணி வரை சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கத்தில் 31.8 மிமீ மழை மற்றும் 34.4 மழை பெய்து உள்ளது. அதேபோல் புதுச்சேரியில் 31 மிமீ மழை பெய்து உள்ளது. அதிகமாக கடலூரில் 65 மிமீ மழை பெய்து உள்ளது.

நிலவரம் என்ன?
டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்து உள்ளது. காரைக்காலில் 53 மிமீ மழை பெய்துள்ளது. நாகப்பட்டினத்தில் 48 மிமீ மழை பெய்துள்ளது. தற்போது வானிலை மாடல்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றன. முன்பு நிலவிய வானிலை மாடல்களின் குழப்பங்கள் காரணமாக மழை பல்வேறு இடங்களில் எதிர்பாராத அளவிற்கு பெய்து உள்ளது. அதோடு தற்போது தென் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை முதல் அதிகனமழை கணிக்கப்பட்டு உள்ளது.

டெல்டா
வடதமிழ்நாட்டில் மிக தீவிர கனமழை கணிக்கப்பட்டு உள்ளது. மழை மேகங்கள் மற்றும் காற்றழுத்தத்தின் லேசான மாற்றங்கள் மிக அதிக அளவிலான மழையை கொடுக்கும். காற்றழுத்தத்தின் லேசான மாற்றங்கள் பொறுத்தே மழை பெய்ய கூடிய இடங்கள் தீர்மானிக்கப்படும். ஆனால் நிலைமை எப்படி இருந்தாலும் சென்னை முதல் தூத்துக்குடி வரை உள்ள பெல்ட் முழுக்க மிக மிக அதிக கனமழை பெய்ய போகிறது. இதற்கு தயாராக இருக்கவேண்டும். அதேபோல் வேதாரண்யம் - புதுச்சேரி ஸ்ட்ரெட்ச் பல இடங்களில் மிக கனமழை பெய்யும்.

மிக தீவிர கனமழை
சென்னையை பொறுத்தவரை கனமழை விட்டு விட்டு பெய்யும். இன்றும், நாளையும் சென்னையில் கனமழை பெய்யும். கடந்த வாரம் சென்னையில் ஏற்பட்டது போலவே இப்போது கனமழை ஏற்படும். பெரும்பாலான ஏரியாக்களில் சென்னையில் மழை பெய்ய உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னையை நெருங்க, நெருங்க மழையின் அளவும் அதிகரிக்கும், என்று சென்னை ரெயின்ஸ் அமைப்பு தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications