“டுவிஸ்ட்”.. பாஜகவில் நான் விலகல! கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குனாங்க - நிர்வாகியின் பல்டி வீடியோ
" 2012 ஆம் ஆண்டில் இருந்து நான் பாஜகவில் இருக்கிறேன். இன்றும் நான் அண்ணாமலை அண்ணன் பின்னால்தான் பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.”
சென்னை: தமிழ்நாடு பாஜக ஐடி விங் சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் 13 பேர் கூண்டோடு ராஜினாமா செய்ததாக இன்று சென்னை மாவட்ட ஐடி விங் தலைவர் அறிக்கை வெளியிட்ட நிலையில், தன்னை கட்சியை விட்டு விலக சொல்லி கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாக ஆர்.கே.சரவணன் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார்.
தமிழ்நாடு பாஜக ஐடி விங்கின் தலைவராக இருந்து வரும் நிர்மல் குமார் கடந்த 5 ஆம் தேதி தமிழ்நாடு பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தது இன்று வரை விவாத பொருளாகவே மாறி இருக்கிறது.
அதற்கு காரணம் அவர் செய்த 2 விசயங்கள். முதலாவது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து கடிதம் எழுதியது. 2 வது எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்ததுடன் மற்ற நிர்வாகிகளையும் இணைத்தது.

அண்ணாமலையை சாடிய நிர்மல்
"என்னால் முடிந்த வரை பல சங்கடங்களை கடந்து கடந்த 1.5 ஆண்டுகளாக பயணித்தேன்! உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்! விடைபெறுகிறேன்." என்று ட்விட்டரில் கூறி 420 மலை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து ஒரு விரிவான கடிதத்தை நிர்மல் குமார் வெளியிட்டார்.

13 பேர் விலகல்
மறுநாளே, மறுநாளே தமிழ்நாடு பாஜக ஐடி விங் செயலாளர் திலிப் கண்ணனும் பாஜகவிலிருந்து விலகி நிர்மல் குமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில் இன்று சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐடி விங் தலைவர் அன்பரசு தலைமையில் மாவட்ட துணை தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் என 13 பேர் விலகி இருக்கிறார்கள்.

அன்பரசு அறிக்கை
இதுகுறித்து அன்பரசு வெளியிட்ட அறிக்கையில், "கட்சியில் சில காலமாக அசாதாரன சூழ்நிலை நிலவி வந்த நிலையில் ஒரு சில தினங்களாக பலர் என்னை தொடர்பு கொண்டு சில விளக்கங்களை கேட்க ஒரே சமயத்தில் அழைக்க முற்படும்பொழுது சிலருக்கு விளக்கம் அளிக்க முடியாத நிலை உருவாகிறது.

பதவி ஆசை இல்லை
ஆகவே என்னுடைய நிலையை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டிய கடமை தற்பொழுது எனக்கு ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பாஜக-வில் பயணித்துள்ளேன். அதில் கட்சி பொறுப்பு என்பது ஒரு சில ஆண்டுகள்தான். பதவி என்பதை எதிர்பார்த்து பணிபுரிபவன் அல்ல என்பது என்னை சுற்றி இருப்பவர்கள் அனைவருக்கும் தெரியும்.

சுயநலவாதிகள்
என் பணிகளை அனைவரும் அறிவீர்கள் என்று நம்புகிறேன். இத்தனை காலம் எனக்கு எதிரான அச்சுறுத்தல்களையும் புகார்களையும் எவ்வாறு நான் எதிர்கொண்டேன் என்று எண்ணி பார்க்கையில் எனக்கே வியப்பாக இருக்கிறது. தகுதியற்றவன் என்று கூறி தரம் பிரிக்கும் சுயநலக்காரர்களின் சூழ்ச்சிகளுக்கு பலியாக விரும்பவில்லை.

திமுகவில் இணைய மாட்டேன்
துஷ்ட சக்திகளிடம் இருந்து காத்துக் கொள்ளும் பரிகாரமாகவே இதை செய்கிறேன். நிச்சயமாக தி.மு.க-வில் இணையமாட்டேன். திமுக-வை விமர்சிக்கவே பாஜக-வில் இருந்து விலகுகிறேன். தொடர்ந்து என் மீது அன்பு காட்டி வரும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

13 பேர் விலகல்
அத்துடன், "என்னுடன் கட்சியில் இணைந்து பணி செய்து வரும் அன்பு சகோதரர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் அவர்களது வலியுறுத்தலின் பேரிலும் அன்புக்குரிய தலைவர் திரு C.T.R நிர்மல் குமார் அவர்களுடன் அரசியல் பாதையில் பயணிப்பது என்று முடிவு செய்யப்படுகிறது." என்று கூறி உள்ளார். அந்த கடிதத்தில் மாவட்ட துணை தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் என 13 பேர் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.

ஆர்.கே.சரவணன் மறுப்பு
இந்த நிலையில் கட்சியில் இருந்து விலகுவதாக கையெழுத்திட்ட ஆர்.கே.சரவணன் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், "இன்று காலை 5 நிமிடம் வர முடியுமா என்று மாவட்டத் தலைவர் அன்பரசு அழைத்தார். என்னை கட்டாயப்படுத்தி கையெழுத்து போட வைத்தார்கள். சமூக வலைதளங்களில் நான் விலகிவிட்டதாக பரப்பி வருகிறார்கள்.

அண்ணாமலை பின்னால் இருப்பேன்
நான் பாஜகவில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். 2012 ஆம் ஆண்டில் இருந்து நான் பாஜகவில் இருக்கிறேன். இன்றும் நான் அண்ணாமலை அண்ணன் பின்னால்தான் பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஐடி விங் மாநில தலைவர் நிர்மல்குமார் போய்விட்டார் என்ற ஒரே காரணத்துக்காக இதுபோல் செய்கிறார்கள்." என்றார்.
-
“அண்ணாமலையை நீக்கினால்தான் பாஜகவுடன் கூட்டணி என எடப்பாடி சொன்னார்”.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications