தனி அறைக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்தனர்.. ஆந்திர போலீஸ் மீது கிருஷ்ணகிரி பெண் பரபரப்பு புகார்
சென்னை: திருடியதாக ஒப்புக்கொள்ள வற்புறுத்தி தன்னை நிர்வாணப்படுத்தி ஆந்திர போலீசார் சித்ரவதை செய்ததாக தமிழக பழங்குடியின பெண் ஒருவர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து சென்ற மிருகத்தனமான செயல் ஒட்டு மொத்த தேசத்தை தலைகுனியவைத்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆந்திர போலீசார் நிர்வாணப்படுத்தி துன்புறுத்தியதாக தமிழக பழங்குடியின பெண் ஒருவர் அளித்த புகார் திடுக்கிட வைத்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ள புலியாண்டபட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணின் கணவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணைக்காக அந்த நபரையும் அவரது மனைவியையும் அழைத்து சென்ற ஆந்திர போலீசார் கொடூரமாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். கணவரை நிர்வாணப்படுத்தி உடல் முழுக்க மிளாகாய் தூளை பூசியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது தொடர்பாக அந்த பெண் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஆந்திர போலீசார் என்னையும் எனது அத்தை, கணவரை அழைத்து சென்றனர். நகையை கொடுக்குமாறு பயங்கரமாக அடித்தனர். எனது கணவரை லத்தியால் மிகக்கொடூரமாக தாக்கினர். ஆடைகளை அவிழ்த்து விட்டு பயங்கரமாக அடித்ததோடு மிளகாய் தூளை உடல் முழுவதும் பூசி, சித்ரவதை செய்தனர். பிறகு எனது கணவரை காட்டுகிறேன் என்று இரவு வந்த ஒரு போலீஸார் என்னை கூட்டிக்கொண்டு போனார்.

ஒரு அறைக்குள் போனதும் கதவை பூட்டி விட்டு என்னையும் பின்பக்கம் கடுமையாக அடித்தனர். எனது ஆடைகளை அவிழ்த்துவிட்டு பலாத்காரம் செய்தனர். கொடூரமாக சித்ரவதை செய்தனர். நடந்த சம்பவத்தை எங்காவது சொன்னால் உன் கணவரை அடித்து கொலை செய்து விடுவோம். உங்கள் மீது கஞ்சா வழக்கு போடுவோம் என்று மிரட்டியதாகவும் பரபரப்பாக பேட்டி அளித்தார். மேலும் இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பழங்குடியின பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் ஆந்திரா போலீஸாருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே, இவ்வழக்கின் விசாரணையை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் இச்சம்பவத்தில் தொடர்புடைய ஆந்திரா போலீஸார் 20 பேர், அவர்களுக்கு துணையாக இருந்த தமிழக போலீஸார் மீது சட்டப்படி நடவடிக்க எடுத்து அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications