தவெகவினரை தெறித்து ஓடவிட்ட திலகபாமா! பெரம்பூரில் நடந்த சுவாரசிய சம்பவம்.. தேர்தல் சலசலப்பு!
சென்னை: பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பாமக வேட்பாளர் திலகபாமா பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது, குறுக்கே வந்த தவெக வாகனத்தை கலாய்த்து அனுப்பியிருக்கும் சம்பவம் கவனம் பெற்றிருக்கிறது.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து என்டிஏ கூட்டணி சார்பில் பாமகவின்(அன்புமணியின்) திலகபாமா களமிறக்கப்பட்டிருக்கிறார்.

நேற்று பெரம்பூர் மகாகவி பாரதி நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விரிவாக பேசிக்கொண்டிருந்தார். இப்படி இருக்கையில், திடீரென தவெகவின் பிரச்சார ஆட்டோ ஒன்று குறுக்கிட்டிருக்கிறது. வழக்கமாக ஒரு கட்சி பிரச்சாரம் மேற்கொள்ளும் இடத்தில் இன்னொரு கட்சியின் வாகனம் வருவது என்பது சாதாரண விஷயம்தான். ஆனால், நேற்று நடந்த சம்பவத்தில் தவெக ஆட்டோ ரெண்டு, மூன்று ரவுண்டு குறுக்கே உள்ளே வந்திருக்கிறது.
ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் தவெக ஆட்டோ குறுக்கும் மறுக்குமாக அதிக சத்தத்துடன் ஓடியதால் டென்ஷனான திலகபாமா பிரச்சார வாகனத்திலிருந்த கட்சியினர், பாடல் சத்தத்தை குறைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால், அதை கேட்டும் கேட்காமல் ஆட்டோ நகர்ந்திருக்கிறது.
இதை கவனித்த திலகபாமா, "பாட்டு அவ்ளோ சவுண்டா இருக்கு. நிறுத்துவியா மாட்டியா? நான் இங்க தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று பேசிக்கொண்டிருக்கிறேன். அப்படி இருக்கும்போது இவ்வளவு சத்தத்துடன் பாடல் ஒலிக்கவிடுவது குறுக்கீடு செய்வதாகும். எனவு சவுண்டை குறைக்க வேண்டும். தேவையில்லாமல் நீங்கள் இங்கே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். பிரச்சாரத்தை குறுக்கீடு செய்தால் தேர்தல் ஆணையத்தின் மீது புகார் அளிப்பேன்" என்று எச்சரித்துள்ளார்.
இவ்வளவு சொன்ன பிறகும் அந்த ஆட்டோ மெதுவாகவே ஊர்ந்து சென்றிருக்கிறது. அப்போது, டென்ஷனான பாமகவினர் ஆட்டோவை சூழ்ந்துக்கொண்டு தவெகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால், தப்பித்தோம் பிழைத்தோம் என்று, தவெகவினர் ஆட்டோவை முறுக்கிக்கொண்டு எஸ்கேப் ஆகியிருக்கின்றனர். இந்த சம்பவம் பெரம்பூரில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications