மின்வெட்டு இல்லை.. லோ ஓல்டேஜ் இல்லை.. திரும்பிப் பார்க்கவைத்த திருவிக நகர் தொகுதி
சென்னை: மின்தடையே இல்லாத தொகுதியாக மாறி இருக்கிறது திருவிக நகர் தொகுதி.
சென்னையின் அந்த அசுர வளர்ச்சியின் காரணமாக புதியதாக உருவானது தான் இந்தச் சட்டமன்றத் தொகுதி. இதனுள்ளாக புளியந்தோப்பு, ஓட்டேரி, எழும்பூர், புரசைவாக்கம், சூளை எனப் பல பகுதிகள் வருகின்றன.

பழமையான சென்னைக்கு அடையாளமாக உள்ள இத்தொகுதியில் மிகக் குறுகலான பகுதிகள் அதிகம் உள்ளன. அதைப்போலவே இந்தத் தொகுதிக்குள் தாழ்வான பகுதிகளும் அதிகம் உள்ளன. ஆகவே மழைக்காலங்களில் வெள்ளம் சூழ்ந்துவிடுவது வாடிக்கை.
அப்படியான மழைக்காலங்களில் மின்வெட்டுக்குப் பஞ்சமே இருக்காது. இப்படிப் பெயர் எடுத்த இந்தத் தொகுதி, 2 ஆண்டுகளில் மின்வெட்டு இல்லாமல் மாறி இருக்கிறது.
"எங்க ஏரியாவுல 300 குடும்பங்கள் இருக்கு. முன்னாடி எல்லாம் அடிக்கடி கரண்ட் போய்விடும். ரொம்ப நேரம் நிறுத்தி வைப்பாங்க. பசங்கள் ஸ்கூல் போகுறப்ப எல்லாம் கஷ்டமா இருக்கும். அந்தப் பிரச்சினை எல்லாம் இப்ப இல்லை. இந்த 2 வருஷத்தில் எங்க ஏரியாவில் மின்வெட்டே இல்லை" என்கிறார் இந்தப் பகுதியில் வசித்துவரும் பெண்மணி அமுல்.

கவுதம் என்ற இளைஞரும் இதே கருத்தைத்தான் முன்வைக்கிறார். இவர் சலவைக் கடை நடத்தி வருகிறார். இப்போது மின்துறை பல முன்னெடுப்புகளைச் செய்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
கிருஷ்ண தாஸ் என்பவர் தனது வீடு சோமசுந்தரம் நகரில் இருப்பதாகச் சொல்கிறார். இவர் இதே பகுதியில் சுமார் 35 வருடங்களாகக் குடியிருந்து வருகிறார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கடி மின்கசிவு ஏற்படும் என்றும் அதனால் மின்வெட்டு ஏற்படும் என்று சொல்லும் இவர், இந்த 2 வருடங்களாக மின்வெட்டு இல்லை என்றும் இவரது வீட்டுக்கு முன்பாகவே ஒரு புதிய மின்மாற்றியை அமைத்துக் கொடுத்துள்ளார்கள் என்றும் சொல்கிறார்.
இந்தத் தொகுதியில் உள்ள எழும்பூர் கோட்டத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வரும் சி ஜெயச்சந்திரன், "எங்கள் கோட்டத்தில் கிட்டத்தட்ட 74 ஆயிரத்து 441 மின் இணைப்புகள் இருக்கின்றன. இந்த இணைப்புகள் அனைத்திற்கும் 4 துணை மின்நிலையங்களிலிருந்து மின் விநியோகம் செய்து வருகிறோம்

கடந்த ஆட்சிக் காலத்தில் பெய்த மழையின்போது எங்கள் பகுதியில் அதிக மழை வெள்ளம் சூழ்ந்தது. அதை மனதில் வைத்து இந்த ஆண்டு மழைக்கு முன்பாகவே சுமார் 194 மின் இணைப்புப் பெட்டிகளைக் குறைந்தது, தரையிலிருந்து 3 அடிக்கு மேல் உயர்த்தி அமைத்தோம். அதனால் வெள்ளத்தின் போதும் மின் பெட்டிகள் சேதமாகவில்லை. மின் விநியோகமும் தங்கு தடை இல்லாமல் வழங்கினோம்.
மேற்கொண்டு பழைய மின்மாற்றிகளை அனைத்தையும் மாற்றிவிட்டு, ஆர்.எம்.யுக்களாக அமைத்துத் தந்துள்ளோம். இவற்றை அமைக்கும் போதே தரையில் தாழ்ந்து இல்லாமல், முன்னெச்சரிக்கையாக மேலே உயர்த்தி அமைத்துள்ளோம். இதனால் 2022இல் பெய்த மழையில் ஒருநாள் கூட மின் தடை இல்லாமல் பார்த்துக் கொண்டோம்.
இந்த ஆட்சியில் புதியதாக துணைமின் நிலையங்களை அமைக்க அனுமதி பெற்றுள்ளோம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இன்னும் 5 ஆண்டு காலத்திற்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் மின் சேவையை வழங்க முடியும்." என்கிறார்
இவரது புளியந்தோப்பு உபகோட்டத்தில்தான் பிஎன்சி மில் உள்ளது. ஆகவே இது பழமையான தொழிற்சாலை நகரமாகும். மழைக்காலங்களில் அதிக வெள்ளநீர் தேங்கும் என்பதால் சூளையில் 24 பில்லர்களும் 59 பில்லர் பக்ஸ் அதிக உயரத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் மற்றொரு பகுதியில் 34 பில்லர்களின் உயரம் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. மின்மாற்றிகளை எடுத்துக் கொண்டால் மொத்தம் 10 புதியதாக அமைக்கப்பட்டுள்ளன.
தனது தொகுதியில் மின்துறை சார்ந்த மேம்பாட்டுப் பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, "முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதல் மின்துறையை நவீனமாக்கி வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலைமையில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு மண்டல அதிகாரியைப் பொறுப்பாக அமைத்தார்.
இந்த அதிகாரிகள் தங்களது தொகுதியில் மின் சேவை சாந்த அனைத்து புகார்களையும் கண்காணித்து அதிரடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆகவே, எந்தப் பிரச்சினையும் உடனடியாக மேலதிகாரிகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இது ஒரு சிறப்பான நடவடிக்கை" என்றார்
தொடர்ந்து பேசிய கவி, "இந்த ஆட்சி வந்த உடன் என் தொகுதியில் உள்ள வார்டு எண் 21இல் மட்டும் 350 மீட்டருக்கு புதைவட மின் கம்பிகளை புதியதாக மாற்றித் தந்துள்ளோம். இந்தக் கம்பிகள் பல ஆண்டுகள் பழமையானவை என்பதைக் கட்டாயம் சொல்லியாக வேண்டும்.
என் தொகுதியில் உள்ள பழைய மின்மாற்றிகளை அகற்றிவிட்டு, ஆர்.எம்.யுக்கள் அமைக்கப்பட்ட வேண்டும் எனச் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். உடனடியாக முதல்வர் ஒப்புதல் அளித்தார். அமைச்சர் அதற்கான தளவாட சாமான்களை வாங்கி தந்தார். இப்போது என் தொகுதிகளில் அனைத்து மின்மாற்றிகளும் ஆர்.எம்.யுக்களாக மாற்றிவிட்டோம். இது ஒரு மிகப்பெரிய பணி" என்கிறார்
-
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
"சாக்கடைக்கு சமமாக வந்து விழுகிற எடப்பாடியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டுவோம்”.. கொதித்த ஸ்டாலின்! -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
உத்தரப் பிரதேசம் vs தமிழ்நாடு! லோக்சபா தொகுதி மறுவரையறையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? ஷாக் தகவல்! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால் -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
அடிச்ச வெயிலுக்கு.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! கொட்டப்போகும் மழை! -
நிலம் வாங்குற பிளான் இருக்கா? அப்போ ஹென்றி சொன்ன இந்த மேஜர் விஷயத்தை பாருங்க.. அப்புறம் முடிவெடுங்க -
மழையும் இருக்கு.. வெயிலும் இருக்கு.. குழப்பி அடிக்கும் வானிலை! உஷார் மக்களே!











Click it and Unblock the Notifications