தலைமைச் செயலகமே வந்த திருவிக நகர் திமுக வேட்பாளர்.. அர்ச்சனா பட்நாயக்கிடம் பரபரப்பு புகார்
சென்னை: நாளை தேர்தல் நடைபெறும் பொழுது திருவிக நகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பெரும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக திருவிக நகர் திமுக வேட்பாளர் கே எஸ் ரவிச்சந்திரன் புகார் அளித்தார். தொகுதியில் வெளியாட்கள் தங்கியிருப்பதாகவும் அவர்களை உடனடியாக வெளியேற்றும்படி காவல்துறையினிடம் புகார் அளித்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் வந்து திமுக வேட்பாளர் கே எஸ் ரவிச்சந்திரன் புகார் அளித்துள்ளார்..
எழும்பூர், பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் இருந்த சில வார்டுகளும், நீக்கப்பட்ட புரசைவாக்கம் தொகுதியில் இருந்த சில வார்டுகளையும் உள்ளடக்கியதாக திருவிக நகர் தொகுதி கடந்த 2011ல் உருவாக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியின் வார்டு 37 முதல் 41 வரை, 59, 60 மற்றும் 97, 98 மற்றும் 99 ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக தொகுதி இருக்கிறது. 2011ல் அதிமுக சார்பில் நீலகண்டன் வெற்றி பெற்றார். 2016 மற்றும் 2021ல் திமுக சார்பில் தாயகம் கவி என்பவர் வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில் 2026 சட்டசபை தேர்தலில் திரு.வி.க.நகர் தொகுதியில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திமுக சார்பில் கே எஸ் ரவிச்சந்திரன் அதிமுக வேட்பாளராக, மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் போட்டியிடுகிறார். நாதக சார்பில் ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். தவெக சார்பில் எம்.ஆர்.பல்லவி போட்டியிடுகிறார்.
சென்னை நாளை தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நேற்று மாலை உடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது.
இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் புகார் மனு அளித்த திருவிக நகர் தொகுதி திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திரு வி க நகர் தொகுதியில் வெளியாக்கல் தங்கியிருப்பதாகவும் அவர்களை உடனடியாக வெளியேற்றும்படி காவல்துறையினிடம் புகார் அளித்தோம் நடவடிக்கை எடுக்காததால் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
நாளை நடைபெறவிருக்கும் தேர்தலின் போது அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளதாகவும் அதற்கு முந்தையையே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக வேட்பாளர் கே எஸ் ரவிச்சந்திரன் புகார் மனு அளித்திருக்கிறார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications