இது லிஸ்ட்லயே இல்லையே.. தெறித்து ஓடிய அதிமுக, பாமக.. புவனகிரியில் இறங்கி அடித்த திருமாவளவன்
திருமாவின் விசிகவானது, புவனிகிரியில் நடந்த வார்டு தேர்வில் வெற்றி பெற்றுள்ளது
சென்னை: புவனகிரி பேரூராட்சியில் ஒருவார்டில் மறுவாக்குப்பதிவு நேற்று காலை நடந்த நிலையில், அதன் ரிசல்ட் வெளிவந்து ஆச்சரியத்தை தந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு இந்த தேர்தல் நடத்தப்பட்டது.
1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, அதில் பதிவான வாக்குகளும் கடந்த 21-ம் தேதி எண்ணப்பட்டன..

திமுக மாஸ் வெற்றி
இதில் திமுக பெரும்பாலான இடங்களில் வென்றதுடன், அதிமுகவின் கோட்டைகளையும் தட்டி தூக்கியது.. 21 மாநகராட்சிகளில் அனைத்தையும் திமுக கைப்பற்றியிருக்கிறது.. அத்துடன் 75%க்கும் மேலான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது... இது திமுகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரலாற்று வெற்றியாக கருதப்பட்டு வருகிறது.. திமுக தொண்டர்களும் மகிழ்ச்சியான மனநிலையில் உள்ளனர்.

இயந்திர கோளாறு
இந்நிலையில், கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியில் மட்டும், ஒரே ஒருவார்டில், வாக்கு எண்ணிக்கையின்போது இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.. இதனால் அங்கு வாக்கு எண்ணிக்கை தடைபடவும், மறுவாக்குபதிவு மீண்டும் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. அதற்கேற்றவாறு, புவனகிரியை தவிர்த்து மற்ற எல்லா இடங்களிலும் தேர்தல் விதிகள் வாபஸ் பெறப்பட்டுவிட்டன.. இந்நிலையில் புவனகிரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ள நிலையில் 4-வது வார்டில் நேற்று மறு வாக்குப்பதிவு நடந்தது.

வாக்கு எண்ணிக்கை
புவனகிரி பேரூராட்சி 4-ம் வார்டு வாக்குச்சாவடி எண் 4AV ல் இந்த மறு வாக்குப்பதிவு நடந்தது.. ஒரே ஒரு வார்டு என்பதால், வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே, வாக்கு எண்ணிக்கை நடத்தி தேர்தல் முடிவுகளும் ஒரே நாளில் வெளியிடப்பட்டுவிட்டது. அதே வாக்குச்சாவடி மையத்தில்தான், இரவு 7 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது... இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட லலிதா 622 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

லிஸ்ட்
இந்த புவனகிரி பேரூராட்சி 4வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர். இதில், விசிக வேட்பாளரை தவிர அதிமுக, பாமக மற்றும் 2 சுயேச்சை வேட்பாளர்களும் டெபாசிட்டையே இழந்துவிட்டனராம்.. ஏற்கனவே திருமாவளவன், தங்கள் கட்சியின் மேயர், துணை மேயர் பதவிகளுக்கான லிஸ்ட்டையே முதல்வர் ஸ்டாலினிடம் தந்துள்ளார்.. இதுபோக, அப்பதவிகளை வேண்டி தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே இருக்கிறார்.. இப்போது இந்த வெற்றியும் விசிகவின் மவுசை எகிற செய்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications