திருமாவளவனின் புது கணக்கு.. விசிகவுக்கு பிரச்சனை! அங்கீகாரத்தை இழக்கும் கட்சி? என்ன நடக்குது?
சென்னை: சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீண்டும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இது ஒரு பக்கம், அக்கட்சியின் தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், இந்த முடிவு காரணமாக விசிக பெரிய நெருக்கடியை எதிகொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.
திருமாவளவன் தற்போது விசிகவின் எம்பியாக இருக்கிறார். அவர் எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட வேண்டும் எனில், எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இத கட்சியின் அங்கீகாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட கட்சி
ஒரு கட்சி, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருக்க வேண்டும் எனில், அதற்கென சில விதிமுறைகள் இருக்கின்றன. கட்சி இத்தனை சதவிகிதம் வாக்குகளை பெற்றிருக்க வேண்டும், இத்தனை எம்எல்ஏக்களை வைத்திருக்க வேண்டும் என்கிற கணக்கு இருக்கிறது. அதாவது, இந்திய தேர்தல் ஆணையம் இதற்கான விதிமுறைகளை வகுத்திருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள்
அதன்படி, ஒரு கட்சி அங்கீகரிக்கப்பட வேண்டும் எனில் அது சட்டமன்ற தேர்தலில் 6% வாக்குகள் மற்றும் குறைந்தது 2 எம்எல்ஏ சீட்டுகளை ஜெயித்திருக்க வேண்டும். இது இரண்டும் கட்டாயம்.
ஒருவேளை தேர்தலில் ஜெயிக்கவில்லை என்றாலும் கூட, மாநிலம் முழுவதும் பதிவான மொத்த வாக்குகளில் 8% வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்.
அதுவும் இல்லையெனில், குறைந்தது மொத்த சட்டமன்ற தொகுதிகளில் 3% இடங்களில் ஜெயித்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகள் இருக்கின்றன. இதில் 3% எனில் 7 தொகுதிகள் வருகிறது.
விசிகவின் அங்கீகாரம்
இதெல்லாம்தான் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கான அடையாளங்கள். இதை செய்தால்தான் ஒரு கட்சியை அங்கீகரிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் தெளிவாக கூறுகிறது. சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் விசிகவின் வெற்றி, அக்கட்சியை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற்றியிருக்கிறது. இப்போது திருமாவளவன் ராஜினாமா செய்தால், உடனே இந்த அங்கீகாரம் ரத்தாகுமா? என்று கேட்டால் இல்லை என்றே பதில் வருகிறது.
திருமாவளவன் ராஜினாமா
காரணம், 2024ல் வழங்கப்பட்ட அங்கீகாரம், அடுத்த தேர்தல் வரை.. அதாவது 2026 சட்டமன்ற தேர்தல் வரை தொடரும் என ஆணையம் கூறுகிறது. எனவே திருமாவளவன் ராஜினாமா செய்வதால் கட்சியின் அங்கீகாரம் போய்விடாது. ஆனால், இந்த சட்டமன்ற தேர்தலில் மேலே குறிப்பிட்டபடி கட்சி ஜெயிக்க வேண்டும். ஒருவேளை ஜெயிக்கவில்லை என்றாலும் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகாது. காரணம், கட்சி தன்னை நிரூபிக்க மற்றொரு வாய்ப்பு உள்ளது என தேர்தல் ஆணையம் கூறுகிறது.
எனவே, திருமாவளவனின் ராஜினாமா கட்சியின் அங்கீகாரத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications