கொரோனா தடுப்பூசி போட்ட பின் விவேக் சுயநினைவு இழந்தாரா? அரசு தெளிவுபடுத்த திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை: கொரோனா தடுப்பூசி போட்டதற்கு பின்னர்தான் நடிகர் விவேக் சுயநினைவை இழந்தாரா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் தர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2-ம் கட்ட பரவல் அதிகரித்துள்ளது. அதனால் கொரோனா தடுப்பூசி போடும் பணி பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் 2 நாட்களுக்கு முன்னர் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் போட்டுக் கொண்டார். அத்துடன் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட வேண்டியதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரமும் செய்தார்.

இந்த நிலையில் நடிகர் விவேக் நேற்று திடீரென சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 4.35 மணிக்கு விவேக் நம்மை விட்டு பிரிந்தார். அவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவேக் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
நடிகர் விவேக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
அவருடைய மறைவு பல கேள்விகளுக்கு இடமளிப்பதாக அமைந்துவிட்டது.
தடுப்பூசி போட்டதற்குப் பின்னர்தான் அவர் சுயநினைவை இழந்தார் என்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும். அவருக்கு எமது அஞ்சலி. இவ்வாறு திருமாளவன் பதிவிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications