அவரு பிடிச்சுட்டாரு.. தந்தை பெரியார் நினைவிடத்தில் சம்பவம் செய்த விஜய்! திருமாவளவன் சொன்ன வார்த்தை!
சென்னை: தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிலையில் விஜய் பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது பேசுபொருளாக மாறி இருக்கிறது. அதே நேரத்தில் சிலர் விமர்சனங்களை முன் வைத்தாலும் விஜய் விளிம்பு நிலை மக்களுக்கானவர் என்பது உறுதியாக இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகராக இருக்கும் போதே நடிகர் விஜய் அரசியலில் குதித்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. கோட் படத்திற்குப் பிறகு ஒரே ஒரு படத்தில் நடித்துவிட்டு அதற்குப்பின் முழுமையாக அரசியலில் ஈடுபட விஜய் முடிவு எடுத்திருக்கிறார்.

இதற்கான ஏற்பாடுகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் அடுத்து அவர் நடிக்கும் படத்திற்கு 275 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக வெளியாகி இருக்கும் தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இப்படியாக சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் குதிக்க விஜய் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில் பல சர்ச்சைகளையும் அவர் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. குறிப்பாக கட்சியின் பெயர் அறிவித்தது தொடங்கி அவரை விமர்சனக் கணைகள் சூழ்ந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிட்ட போதும் பல சர்ச்சைகளை சந்திக்க வேண்டி இருந்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னத்தை விஜய் பயன்படுத்தி இருப்பதாக அக்கட்சியின் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும் தங்கள் அமைப்பின் கொடியை பயன்படுத்துவதாக சில சாதி அமைப்புகள் விஜய்க்கு எதிராக பேசின. இது ஒருபுறம் இருக்க மாநாடு தொடர்பாகவும் விஜய் பல பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகிறார். பல இடங்களில் இடம் பார்த்து மாநாட்டுக்காக சரியான இடம் அமையாத நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் மாநாடு நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் காவல் துறையின் கடுமையான கெடுபிடிகள் காரணமாக விஜய் மாநாடு நடக்கும் தேதி தள்ளிப் போனதாக கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொன்ன விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை என பாஜக தலைவர்கள் விமர்சனக் கணைகளை கொடுத்தனர். தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், எச்.ராஜா உள்ளிட்ட பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். ஏற்கனவே அரசியலில் தடம் பதித்து இருக்கும் திமுகவின் ஜெராக்ஸ் காபி போல விஜய் செயல்படுவதாக விமர்சனம் முன் வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பெரியார் திடலில் உள்ள அவரது சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பெரிய அளவில் நிர்வாகிகள் யாருக்கும் அழைப்பு விடுக்காமல் பொதுச்செயலாளர் ஆனந்த உடன் பெரியார் திடலுக்கு வந்த விஜய் தானே மலர் தட்டையும் மாலையையும் ஏந்தி வந்து மரியாதை செலுத்தினார். இதற்கும் பாஜக தனது விமர்சனத்தை முன் வைத்தது. அதே நேரத்தில் பலரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்பியுமான தொல்.திருமாவளவன். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்பு இளவல் விஜய் அவர்களைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.
தந்தை பெரியாரின் பிறந்தநாளான சமூகநீதி நாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மலர்த்தூவி வணக்கம் செலுத்தியிருப்பது அவர் விளிம்புநிலை மக்களுக்கானவர் என்பதையும் அவருக்கு சமத்துவமே இலக்கு என்பதையும் உணர்த்துகிறது." என பதிவிட்டுள்ளார்.
-
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியில் திமுக.. கட்சியை மீட்டெடுக்க தேசிய அரசியல் ஆலோசகரை அழைக்கிறது? -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
ஜான் ஆரோக்கியசாமியின் டெல்லி லாபி.. திமுகவுக்கு தூதுவிட்ட சுனில்.. சபரீசனுக்கு வந்துச்சே கோபம் -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்!












Click it and Unblock the Notifications