2016 தேர்தலில் விசிக தனித்து போட்டியிட்டது ஏன்?.. திமுகவுக்கு எதிரான பிளானா?.. திருமா சொன்ன ரகசியம்
சென்னை: 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மக்கள் நல கூட்டணி என்பதை தொடங்கி தனித்து போட்டியிட்டது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் விளக்கியுள்ளார்.
திமுக பொதுக் குழு கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்டார். இதை கொண்டாடும் வகையில் திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
இதில் கூட்டணி கட்சி தலைவர்களான திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில் சனாதனக் கும்பலின் இலக்கே திமுகவை அழிக்க வேண்டும் என்பதுதான்.

சங் பரிவார்
அதற்கு ஒரு போதும் இடம்தரக் கூடாது. சங் பரிவார் பேசும் அரசியலை எதிர்த்தால் நாம் ஏதோ இந்துக்களுக்கு எதிராக பேசுவதாக நம் மீது அவதூறு பரப்புகிறார்கள். நாம் இந்துக்களுக்கு எதிரி அல்ல. இந்து சமூகம் மிகப் பெரியது. இந்துக்கள்தான் நம் கட்சிகளில் நிறைந்து இருக்கிறார்கள். மத வெறியின் மூலம் மக்களை பிரித்து அழிக்க நினைக்கும் நாசக்கார அரசியலை சங்பரிவார் கையில் எடுத்துள்ளது.

பாசிசம்
பாசிசம்தான் ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கையாகும் என்றார். மேலும் 2016ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் விசிக தனித்து போட்டியிட்டது ஏன் என்பது குறித்தும் திருமாவளவன் விளக்கியுள்ளார். அவர் கூறுகையில் 2016 ஆம் ஆண்டு நாங்கள் ஏதோ திமுகவிற்கு எதிராக சதி செய்வதற்காக நாங்கள் தனித்து நிற்கவில்லை.

தனித்து போட்டி ஏன்
நாங்கள் அவ்வாறு சென்றதற்கான காரணம் ஸ்டாலின்தான். 2014 இல் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த உடனேயே எங்களை அழைத்து நாங்கள் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட போகிறோம். வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக முடிவு செய்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் இனி நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள் என ஸ்டாலின் சொன்னார். அதனால்தான் நாங்கள் மக்கள் நல கூட்டணி என்ற ஒன்றை ஆரம்பித்தோம். அதில் நாங்கள் போட்டியிட்டோம் என்றார்.

ஒரு இடத்திலும் வெல்லவில்லை
கடந்த 2015 ஆம் ஆண்டு மக்கள் நல கூட்டணி தொடங்கப்பட்டது. இதில் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் இணைந்தன. விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 2016 சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியினர் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.
-
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?












Click it and Unblock the Notifications