ஸ்டாலினை நேரில் சந்தித்த திருமாவளவன்.. காங்கிரஸ் பாணியில் விசிகவின் வியூகம் கைகொடுக்குமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடுப் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகள் கேட்கிறதாம். விசிகவுக்கு 6 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்றே தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் இன்று காலை முதல்வர் ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்தார். அப்போது கூடுதல் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று முறையிட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக காங்கிரசும்இப்படித்தான் ப சிதம்பரத்தை நேரில் அனுப்பி கூடுதல் தொகுதி வாங்கி இருந்தது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இம்முறை 10 தொகுதிகளை திமுக தலைமையிடம் கேட்டுள்ளது. குறிப்பாக, வட மாவட்டங்க தங்களுக்குச் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக விசிக தரப்பு கூறி வந்தது. அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், கட்சியின் வளர்ச்சிக்கு ஏற்ப கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வந்தார்.

Thirumavalavan Meets Stalin in Person Will the VCK s Congress-Style Strategy Pay Off

8 இடங்கள்

ஆனால், திமுக தரப்போ கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் மற்றும் தேமுதிக போன்ற புதிய கட்சிகள் இணைந்துள்ளதை காரணம் காட்டி, கடந்த முறை வழங்கிய 6 தொகுதிகளையே இம்முறையும் வழங்க முடிவு செய்தது. கூடுதல் தொகுதிகளை ஒதுக்கினால் மற்ற கூட்டணிக் கட்சிகளும் அதேபோல் கேட்கும் என்பதால், திமுக தலைமை விசிகவிற்கு 6 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்றது. நேற்றே விசிக உடன் கூட்டணி இறுதி செய்திருக்க வேண்டியது. திமுக தரப்பில் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் எ.வ.வேலு ஆகியோர் விசிக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். குறைந்தபட்சம் 8 இடங்களையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் விசிக நிர்வாகிகள் முனைப்பு காட்டி வந்தது


ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்

நேர்காணல் பணிகள் வருகிற 22-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அதற்குள் விசிகவுடனான தொகுதிப் பங்கீட்டை முடிவுக்குக் கொண்டு வர திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. திருமாவளவன் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இடையேயான நேரடி சந்திப்பிற்குப் பிறகு இந்த இழுபறி முடிவுக்கு வரும் என விசிகவினர் நம்பினார்கள். இந்நிலையில் இன்று காலை திருமாவளவன், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இன்று மாலைக்குள் விசிக தொகுதி பங்கீடு இறுதியாகும் எனறு தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரத்தை முதல்வரிடம் அனுப்பி 25 தொகுதியை 28 ஆக காங்கிரஸ் அதிகரித்தது. அதே பாணியில் தான் விசிக தலைவர் திருமாவளவனே நேரில் சென்று முறையிட்டு கூடுதல் தொகுதி பெற முயற்சிக்கிறார். எனவே கூடுதல் தொகுதி கிடைக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

தேமுதிகவிற்கு அதிகம்

அதேநேரம் விசிகவைவிட தேமுதிகவிற்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. எட்டு தொகுதிகள் வரை தேமுதிகவிற்கு திமுக வழங்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். ஏற்கனவே ராஜ்யசபா சீட்டும் திமுக, தேமுதிகவிற்கு வழங்கி உள்ளது. இன்று அல்லது நாளைக்குள் தேமுதிக தொகுதிகள் உறுதியாகும் என்கிறார்கள்.

திமுக போட்டியிட போகும் தொகுதிகள் எண்ணிக்கை

தற்போது வரை திமுக கூட்டணி கட்சிகளுக்கு 43 தொகுதிளை ஒதுக்கி உள்ளது. இன்னும் 20 தொகுதிகள் வரை கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படும் என தெரிகிறது. அதில் சில உதயசூரியன் சின்னமும் தரப்படும் என்றும் கூறப்படுகிறது சுமார் 175 தொகுதிகளுக்கு மேல் திமுக போட்டியிட வாய்ப்பு அதிகம் என்றே சொல்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+