பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இத்தனை நாள் இல்லாம இப்போ ஏன்? மத்திய அரசு தலையீடா? திருமாவளவன்
விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதில் எந்த கால பொருத்தமும் இல்லை - திருமாவளவன்
சென்னை: பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற அறிவிப்பில் கால பொருத்தமும் இல்லை, அரசியல் பொருத்தமும் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார். இவர்களுடன் நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதனும் தேமுதிக சார்பில் ஆனந்தும் போட்டியிடுகிறார்கள். எனினும் அதிமுக, திமுக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அரசியல் கட்சித் தலைவர்கள்
இந்த நிலையில் இங்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பிரச்சாரம் செய்தார். அவர் சத்யா நகர், கிருஷ்ணம்பாளையம், மரப்பாலம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

21 மாத காலம்
அப்போது திமுக ஆட்சியில் இந்த 21 மாத காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். அவர் பேசுகையில் மத்திய நிதி நிலை அறிக்கையில் சிறுபான்மையினருக்கு பறிக்கப்பட்ட சலுகைகள், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது என பிரச்சாரம் செய்தார். இதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஈரோடு இடைத்தேர்தல்
அவர் கூறுகையில் ஈரோடு இடைத்தேர்தலில் திமுக தேர்தல் முறைகேடு ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகளால் பரப்பரப்படுகிறது. தேர்தல் ஆணையம் பாஜக கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் திமுக தேர்தல் விதிமுறைகள் மீறினால் அவர்கள் நடவடிக்கை எடுக்கட்டும். பிபிசி நிறுவனம் அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை பழி வாங்கி வருகிறது.

நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடியின் கொடுகோள் ஆட்சி உச்சத்தில் உள்ளது என்பதற்கு இதுவே சாட்சி. விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற அறிவிப்பில் கால பொருத்தமும் இல்லை, அரசியல் பொருத்தமும் இல்லை, பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை தற்போது அறிவிப்பதற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பினார். இலங்கையில் உள்ள சிங்கள அரசை அச்சுறுத்த மத்திய பாஜக அரசு தலையிடுகிறது என திருமாவளவன் குற்றம்சாட்டினார்.

பிரபாகரன்
விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் உரிய நேரத்தில் மக்கள் முன்பு தோன்றுவார் என்றும் பழ நெடுமாறன் திடீர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால் இதை இலங்கை அரசு மறுத்தது. அது போல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் இதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications