அதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை, அதிபர் ஆட்சிக்கு வழிகோலும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான தொல்.திருமாவளவன் லோக்சபாவில் இன்று தனது உரையில் குறிப்பிட்டார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சி தலைவர் உறுப்பினர்களும் லோக்சபாவில் உரையாற்றி வந்தனர். இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவனுக்கும், இதன் மீது பேச, வாய்ப்பு கிடைத்தது.

அப்போது அவர் பேசுகையில், குடியரசு தலைவர் உரையில் தெரிவித்த திட்டங்களை மத்திய அரசு கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். அதேநேரம், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையை ஏற்க முடியாது. இந்தியாவை அதிபர் ஆட்சி நிலைக்கு கொண்டு வரக்கூடிய மறைமுக திட்டம் தான் இந்த தேர்தல் நடைமுறை. நாட்டு அரசியல் சாசனத்திற்கும், மக்களுக்கும் எதிரான திட்டம் தான் இந்த தேர்தல் முறை.
தாழ்த்தப்பட்டோருக்கு குடியரசுத் தலைவர் உரையில் எந்த ஒரு புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை. நாட்டில், பெண்களுக்கும், சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications