Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அதை" எவனாவது சொன்னா செவுள்ளயே ஒன்னு வை.. பாஜக வாலை இங்க ஆட்டாதீங்க, ஒட்ட நறுக்கிடுவோம்: திருமாவளவன்

பாஜக தமிழகத்தில் வாலை ஆட்டினால் ஒட்ட நறுக்குவோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தமிழை பிராந்திய மொழி என்று யாராவது சொன்னால், செவுள்ளயே ஒன்னு வை.. அது தேசிய மொழி என்று உரக்க சொல்லு.. பாஜக தமிழ்நாட்டில் வாலை ஆட்டினால் ஒட்ட நறுக்குவோம்.. மற்ற கட்சிகள் செய்கிறதோ, இல்லையோ, அதனை விடுதலை சிறுத்தைகள் கண்டிப்பாக செய்யும்" என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனங்கல் மாளிகை அருகில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக மீனவர்களின் மீது துப்பாக்கி சூடு, இந்து திணிப்பு மற்றும் மாநில உரிமை பறிப்பு ஆகியவை மற்றும் பாஜக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் தலைமையில், நடந்த இந்த கூட்டத்தில், எம்எல்ஏ எஸ்எஸ் பாலாஜி பனையூர் பாலு மற்றும் கொட்டும் மழையிலும் கொடைகள் பிடித்தபடி 500-க்கும் மேற்பட்ட கட்சி முக்கிய நிர்வாகி முதல் தொண்டர்கள் வரை என அனைவரும் கலந்து கொண்டனர்.

 45 ஓட்டைகள்

45 ஓட்டைகள்

"வீரவேல் என்று ஒரு இளைஞர்.... மீன் பிடிப்பவர்... சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவர்.. தமிழக பகுதியில் தான், மீன் பிடித்திருக்கிறார்கள்.. இவர்கள் சென்ற படகில் இந்திய தேசிய கொடியும் பறக்கின்றது... இதெல்லாம் தெரிந்தும், இந்திய கடற்படை வந்து துப்பாக்கி சூடு நடத்துகிறது... அந்த படகில் 45 துளைகள் உள்ளன... துப்பாக்கி சூட்டில் இளைஞரின் குடல் சேதமடைந்து விட்டது... அவர் தப்பிப் பிழைப்பது ரொம்ப கஷ்டம்.. பல காலமாக இலங்கை கடற்படையினை எதிர்த்து போராடியுள்ளோம்... முதல்முறையாக இந்திய கடற்படையினை எதிர்த்து போராடும் அவலம் வந்துள்ளது.

 பவர் காட்டணும்

பவர் காட்டணும்

இந்திய கடற்படையின் மீது வழக்குப்பதிவு செய்த தமிழ்நாட்டு காவல்துறையை பாராட்டுகிறோம்... ஆனால் அவர்களை கைது செய்ய வேண்டும்... தமிழக அரசுக்கும் பவர் இருக்குன்னு காட்டணும்... இந்திய கடற்படையினரால் சுடப்பட்ட தமிழக மீனவர் வீரவேல் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்...

திருமாவளவன்

திருமாவளவன்

நவம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மனுஸ்மிருதி புத்தகங்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். சனாதனக் கொள்கையை தூக்கி பிடிக்கும் ஆர்எஸ்எஸ்ஸை அம்பலப்படுத்த நாம் எடுத்திருக்கும் அடுத்த கட்ட முயற்சிதான் மனுஸ்மிருதி புத்தகங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது... இந்தியாவிலேயே ஒரு லட்சம் மனுஸ்மிருதி புத்தகங்களை மக்களுக்கு இலவசமாக கொடுக்கும் ஒரே கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சிதான்.

 22 - வீராப்பு

22 - வீராப்பு

அனைத்து விதமான படிப்புகளும் ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன.. அப்புறம் ஏன் அவர்களுக்கு வீராப்பு? தமிழைக் காப்போம், அனைத்து மொழிகளையும் மதிப்போம், இந்தியை எத்தனையோ இடங்களில் சொல்லிக் கொடுக்கிறார்கள்... நாங்கள் போய் அதையெல்லாம் தடுக்கிறோமா? இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்... ஆங்கிலம் ஏற்கனவே பயிற்று மொழியாக இருக்கிறது. சில பேர் இந்தியை தேசிய மொழி என்றும் தமிழை பிராந்திய மொழி என்றும் சொல்லுவார்கள்... அரசமைப்பு சட்டத்தின்படி இந்தியாவின் தேசிய மொழிகள் மொத்தம் 22 இருக்கின்றன.. அதில் தமிழும் ஒன்று...

 செவுள்ளயே வை

செவுள்ளயே வை

தமிழை பிராந்திய மொழி என்று யாராவது சொன்னால் செவுள்ளயே ஒன்னு வை.. அது தேசிய மொழி என்று உரக்க சொல்லு.. பாஜக தமிழ்நாட்டில் வாலை ஆட்டினால் ஒட்ட நறுக்குவோம்.. மற்ற கட்சிகள் செய்கிறதோ, இல்லையோ, அதனை விடுதலை சிறுத்தைகள் கண்டிப்பாக செய்யும்... பன்முகத்தன்மை உள்ள இந்தியாவை ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்கின்ற நோக்கத்தில் செயல்படுகிற பாஜக ஏன் இந்து மதத்தில் இருக்கக்கூடிய பல கலாச்சாரங்களை ஒரே கலாச்சாரமாக கொண்டு வரக்கூடாது?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+