பரிதவிப்பில் விஜய்.. பஞ்சாயத்து பண்ணும் பாஜக? ஆளுநர் திட்டமிட்டு செய்த சதி? திருமாவுக்கு வந்த கோபம்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அனுமதிப்பது தான் ஜனநாயகம், அவ்வாறு இல்லாமல் காலம் தாழ்த்துவது திட்டமிட்டு செய்யும் சதி என ஐயப்படுகிறோம் எனவும், எங்களுக்கு ஆதரவு கேட்டு கடிதம் எழுதிய தவெகவை நாங்கள் புறம் தள்ளவில்லை, விசிக உயர்மட்ட குழு கூட்டிய பிறகு தான் முடிவு எடுக்க முடியும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
108 தொகுதிகளில் வென்று தமிழகத்தின் தனிப் பெரும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் உருவெடுத்தது. விஜய் முதல்வராக போகிறார் என அந்த கட்சியினர் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் விஜய்க்கு தனது ஆதரவை தெரிவித்தது.

இந்நிலையில், இன்று 2வது நாளாக ஆளுநர் மாளிகை நோக்கி சென்றார் விஜய். மேலும், தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால் தற்போது வரை ஆளுநர் அதற்கு செவி சாய்க்கவில்லை. பெரும்பான்மையை நிரூபித்தால் தான் ஆட்சி என ஆளுநர் திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம்.
தொல்.திருமாவளவன்
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அனுமதிப்பது தான் ஜனநாயகம் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்," தவெகவிற்கு 118 பெரும்பான்மையை நிருபித்துவிட்டு பதிவியேற்க வாருங்கள் என ஆளுநர் கூறுவதால் இன்றும் இரண்டாம் முறையாக தவெக தலைவர் விஜய் ஆளுநர் சந்தித்துள்ளார். தவெக ஆட்சி அமைக்க முன்கூட்டியே ஆதரவு இருக்கிறது என கடிதம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
விஜய்
பெரும்பான்மை உள்ள கட்சி என்கின்ற அடிப்படையிலும், தனி பெரும் கட்சி என்கின்ற அடிப்படையிலும் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அதற்கு அனுமதி அளிப்பது தான் அவர்களுடைய பொறுப்பு அவரின் கடமை ஆக இருக்கும். விசிக உயர்மட்ட குழு கூட்டம் நாளை அல்லது நாளை மறுநாள் என பத்திரிகைகளில் தவறான தகவல் வந்துள்ளது. எங்களது உயர்மட்ட குழு கூட்டம் விரைவாக கூடும் அதில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
ஆளுநர்
பெரும்பான்மை பெற்றும் ஆளுநர் விஜயை ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மூலம் கண்டித்துள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கை ஏற்புடையது அல்ல. பாஜக தமிழ்நாட்டு அரசியலுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றிருக்கக் கூடிய தவெகவை ஆட்சி அமைக்க அனுமதிப்பதுதான் ஜனநாயகம். அவ்வாறு இல்லாமல் காலம் தாழ்த்துவது திட்டமிட்டு சதி என்றுதான் ஐயப்படுகிறோம்.
காலம் தாழ்த்தக்கூடாது
ஆளுநர் காலம் தாழ்த்தக்கூடாது என்ற வேண்டுகோள் விடுகிறோம். இக்கட்டான சூழலில் விசிக, இடதுசாரிகள் முடிவுகளை விரைவாக எடுக்கமால் தாமதப்படுத்துகிறா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இதில் காலதாமதம் இல்லை எங்களுக்கு என்று ஒரு நடைமுறைகள் உள்ளது. நாங்கள் அவசரப்பட முடியாது. எங்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள் அதற்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். அவருடைய கோரிக்கையை புறம் தள்ளவில்லை எங்களது உயர்மட்ட குழுவில் விவாதித்து தான் முடிவு எடுக்க முடியும். அதிமுக திமுக கூட்டணி வைக்கிறாங்கள் என்ற வதந்தி வருகிறது என்கிறீர்கள். நீங்களே வதந்தி என கூறி விட்டீர்களே" என்றார்.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு












Click it and Unblock the Notifications