வள்ளுவரை யாருமே நேரில் பார்த்ததில்லை.. அவரது தலையில் குல்லா கூட வைக்கலாம்.. திருமாவளவன் அதிரடி
திருவள்ளுவருக்கு குல்லா கூட வைக்கலாம் என்று திருமாளவன் பேசியுள்ளார்
சென்னை: சிவன், மகாவிஷ்ணுவை யார் நேர்ல பார்த்தது? அதுபோல வள்ளுவரையும் யாருமே நேரில் பார்த்ததில்லை.. அவர் ஒரு கற்பனை.. அவரை இந்து சாமியாராக்க பாஜக முயற்சிக்கிறது.. ஏன், திருவள்ளுவர் தலையில் குல்லா கூட வைக்கலாம்" விசிக தலைவர் திருமாவளவன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
நாட்கள் கடந்தும் திருவள்ளுவர் விவகாரம் இன்னும் ஓய்ந்த பாடில்லை.. ஏதாவது ஒரு ஊரில், ஏதாவது ஒரு ரூபத்தில் வள்ளுவர் குறித்த சர்ச்சை சம்பவங்களும், அது சம்பந்தமான வெளிப்பாடுகளும் கட்சி வாரியாக நிகழ்ந்து வருகின்றன.
பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை, கடந்த 3-ம் தேதி நள்ளிரவு மர்ம நபர்களால் அவமதிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சம்பவம் குறித்து, தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி, இந்த காரியத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பிள்ளையார்பட்டி
இதற்கிடையில், மர்ம நபர்களை உடனே கைது செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்தும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

கண்டிக்கிறோம்
"திருவள்ளுவர் சிலை மீது சாணி அடிப்பதால் அவரது மேன்மை ஒன்றும் கெட்டுவிட போவதில்லை. ஆனாலும் இதை வன்மையாக கண்டிக்கிறோம். அத்துடன் அவரது சிலைக்கு ருத்ராட்ச மாலை, காவி துண்டு அணிவித்ததையும் ஏற்க முடியாது. வள்ளுவருக்கு எந்த சாயத்தையும் பூசி அவரை சுருக்கி விடமுடியாது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறது? என தெரியவில்லை.

பெரியார் மண்
திருவள்ளுவர் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடி, அதன்மூலம் தமிழகத்தில் காலூன்ற பாஜக நினைக்கிறது. திருவள்ளுவரை இந்து சாமியாராக்கவும் அக்கட்சி முயற்சிக்கிறது. பாஜகவின் நினைப்பு ஒருபோதும் தமிழகத்தில் நிறைவேறாது. இது பெரியார் மண். வள்ளுவமும்-அம்பேத்கரின் கொள்கைகளும் வேறூன்றி கிடக்கும் மண்.

குல்லா கூட வைக்கலாம்
திருவள்ளுவர் ஆண்டு அறிவியல் பூர்வமாக இல்லை. சிவன், மகாவிஷ்ணுவை யார் நேரில் பார்த்தது.. அப்படித்தான் திருவள்ளுவரையும் யாரும் நேரில் பார்த்ததில்லை.. அவர் ஒரு கற்பனை.. அவரது தலையில் குல்லா கூட வைக்கலாம்.. சமணர்களும், பவுத்தர்களும், இஸ்லாமியர்கள் கூட திருவள்ளுவருக்கு உரிமை கோரலாம்.. வள்ளுவன் இருந்த போது இந்து மதம் இல்லை" என்றார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திருவள்ளுவருக்கு காவிச் சாயமா? தமிழர்களின் அடையாளத்தைச் சிதைக்கும் ஆளுநர் - வேல்முருகன் கண்டனம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications