மக்களை பற்றிச் சிந்திக்காமல்... மேற்கு வங்க தேர்தலை பற்றி மட்டுமே பிரதமர் சிந்தித்தார் -திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களை பற்றிச் சிந்திக்காமல் மேற்கு வங்க தேர்தலை பற்றி மட்டுமே பிரதமர் மோடி சிந்தித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

விழுபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

Thirumavalavan says, PM modi only thought about the West Bengal elections

மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் மத்திய தொகுப்பிற்கு வழங்கப்படும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, ஏமாற்றம் தரும் வகையில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளை திட்டமிட்டு தமிழக அரசு அழைக்கவில்லை என்றும் ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடுகள் சந்தேகத்தை எழுப்பும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்திலேயே ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள நிலையில் இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை தமிழகத்திற்கு வழங்காமல் மத்திய தொகுப்பிற்கு கொண்டுசென்று மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்பதை எதிர்த்து புதிய மனு தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என்ற முடிவு வருந்தத்தக்கதாக இருந்தாலும் அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்றுக்கொள்வதாகவும், இருப்பினும் பொதுத்துறை நிறுவன அதிகாரிகள் மூலமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+