Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஸ்வாதி".. ராம்குமார் கழுத்தை போலீஸ்தான் அறுத்திருக்க வேண்டும்.. ஏன் தெரியுமா?.. திருமாவளவன் கருத்து

திருமாவளவன், ஸ்வாதி வழக்கில் கைதான ராம்குமார் மரணத்தில் சந்தேகம் வெளிப்படுத்தி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்வாதி கொலை கேஸில் கைதான, ராம்குமார் மரணம் தொடர்பாக, மிக முக்கியமான சந்தேகம் ஒன்றை விசிக தலைவர் திருமாவளவன் எழுப்பி உள்ளார்.
சென்னையில் நடந்த ஸ்வாதி கொலையையும், ராம்குமாரின் மரணத்தையும், தமிழக மக்கள் எளிதில் மறந்திருக்க முடியாது.. இதோ அந்த சம்பவங்களின் சுருக்கத்தை இங்கு காண்போம்:

சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வாதி.. இவர் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராகப் பணியாற்றிவந்தார்.

 நுங்கம்பாக்கம்

நுங்கம்பாக்கம்

கடந்த 2016ம் ஆண்டு, ஜுன் மாதம் 24-ம் தேதி, அதிகாலை 06.35 மணிக்கு, வேலைக்கு செல்வதற்காக நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தார்.. ரயிலுக்காக அங்கே காத்திருந்தார்.. அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், திடீரென கத்தியை எடுத்து, ஸ்வாதியை சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பிவிட்டார். இதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் ஸ்வாதி.

 ராம்குமார்

ராம்குமார்

பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நுங்கம்பாக்கம் ஸ்டேஷனில் நடந்த இந்த சம்பவம், நாட்டின் மனசாட்சியையே உலுக்கியது... இதையடுத்து, ஸ்வாதி கொலை வழக்கு தமிழக அரசியல் களத்திலும் பல்வேறு அதிர்வுகளை அந்த சமயத்தில் ஏற்படுத்தியது. போலீஸார் விசாரணையும் துரிதமானது.. தென்காசி மாவட்டம், மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவர்தான் ஸ்வாதியைக் கொலை செய்தார் என்று உறுதியானது.. இதையடுத்து, ராம்குமாரை போலீஸார் கைது செய்தனர்..

 ஒயர் கடித்து..

ஒயர் கடித்து..

போலீசார் கைது செய்யச் சென்றபோது, ராம்குமார், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ராம்குமார், பிறகு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஸ்வாதியை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், தன் காதலை ஸ்வாதி ஏற்றுக்கொள்ளாததால் ராம்குமார் கொன்றதாகவும் போலீஸ் சொல்லப்பட்டது.. பின்னர், 2016, செப்டம்பர் 18-ம் தேதி, ஜெயிலில் மின்சார வயரைக் கடித்து, ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்...

பலிகடா

பலிகடா

இதையடுத்து, ஸ்வாதி கொலை வழக்கும், முடிவுக்கு வந்துவிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.. ஆனாலும் இந்த விவகாரம் அடங்கவில்லை.. தன் மகனின் மரணத்தில் மர்மம் உள்ளது என்று ராம்குமாரின் தந்தை மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார்... ஸ்வாதி கொலையில் ஆரம்பம் முதலே மர்மங்கள் இருக்கின்றன, யாரோ ஒருவரை காப்பாற்றுவதற்காக ராம்குமார் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் சமூக ஆர்வலர்களும் கண்டனங்களை தெரிவித்தனர்.

 ஹிஸ்டோபேத்தாலஜி

ஹிஸ்டோபேத்தாலஜி


இந்த வழக்கு விசாரணை கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக நடந்தது.. மனித உரிமை ஆணையத்தில் ராம்குமாரின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் சமர்ப்பிக்கப்பட்டது.. சம்மந்தப்பட்ட டாக்டர்களும், போலீஸாரும், மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்... மேலும், ராம்குமாரின் மூளை, இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளின் திசுக்களை ஹிஸ்டோபேத்தாலஜி நிபுணர்கள் ஆய்வுக்கு உட்படுத்தியபோது, ராம்குமார் மின்சாரம் தாக்கிதான் இறந்தார் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று தெரியவந்தது, இது இந்த வழக்கில், மிகப்பெரும் திருப்பமாக பார்க்கப்பட்டது.

 BLUE MURDER = ப்ளூ மர்டர்

BLUE MURDER = ப்ளூ மர்டர்

ராம்குமாரின் கழுத்தில் வலது பக்கத்தில் ஆழமாக அறுக்கப்பட்ட வெட்டுக் காயம் ஒன்றும், இடது பக்கம் லேசாக அறுக்கப்பட்ட வெட்டுக்காயமும் இருப்பதாக மருத்துவமனை ஆவணங்களும் தெரிவித்தன.. இப்படி, ஸ்வாதி - ராம்குமார் இருவரின் மரண சம்பவங்களுமே, தமிழகத்தை ஒரு புரட்டு, புரட்டி போட்டுவிட்டது என்றே சொல்லலாம்.. இந்நிலையில் ஆங்கில பத்திரிகையான கேரவானில் ஸ்வாதி கொலை வழக்கு குறித்து கட்டுரை வெளியிவந்துள்ளது.. "புளு மர்டர்" என்று தலைப்பிட்ட அந்த செய்திக் கட்டுரையில், திருமாவளவனின் பேட்டி ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் ராம்குமார் கைதானது, உயிரிழந்தது குறித்த தன்னுடைய சந்தேகத்தையும் திருமாவளவன் எழுப்பி உள்ளார்.

 கழுத்தை அறுத்தார்

கழுத்தை அறுத்தார்

"வலது கை பழக்கமுள்ள ஒருவர், தன்னுடைய கழுத்தை வலது பக்கம் அறுத்துக்கொள்வது என்பது மிக மிக அரிதாக நடக்கும் ஒன்று.. வலது கை பழக்கமுடையவர்கள், தங்கள் கழுத்தையும், குரல்வளையும் அறுக்கும்போது, இடமிருந்து வலமாக அறுப்பதற்கான வாய்ப்புதான் உண்டு என்பதை தர்க்கரீதியாக விஷயங்களை அணுகும் யாவரும் புரிந்துகொள்ளலாம்.. காவல்துறையினர்தான் ராம்குமாரின் கழுத்தை அறுத்திருக்க வேண்டும் என நம்புகிறேன்" என்றும், திருமாவளவன் தன்னுடைய சந்தேகத்தை துல்லியமாக கேட்டுள்ளார்.

 தடவியல் துறை

தடவியல் துறை

இப்படி துல்லியமாக சந்தேகம் எழுப்பும் திருமாவளவன், சென்னை மாநிலக் கல்லூரியில் முதுநிலை குற்றவியல் முடித்தவர்.. சென்னை சட்டக் கல்லூரியில் சட்டமும் படித்தவர்.. 1988-ல் படிப்பை முடித்துவிட்டு, தமிழக அரசின் தடயவியல் துறையில் அறிவியல் உதவியாளராக பணியிலும் சேர்ந்தவர் ஆவார்.. அன்று ஸ்வாதி படுகொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவதும் திருமாவளவன்தான்.. இந்த கொலை வழக்கில், முகநூல் மூலம் சுவாதியோடு தொடர்பு கொண்ட வேறு சில நபர்களுக்கு இதில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தை பலர் எழுப்புகிறார்கள் என்றும், அதனால், தமிழக அரசு இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதும் திருமாவளவன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+