"தற்குறி எடப்பாடி பழனிசாமி என்று பேசியவர் அண்ணாமலை.. அப்போ எங்கே போனாங்க?”.. திருமாவளவன் தாக்கு!
சென்னை: "தற்குறி எடப்பாடி பழனிசாமி என்று பேசியவர் அண்ணாமலை. அப்போது அவர்கள் வாயை மூடிக்கொண்டு எங்கேயோ மவுனித்துக் கிடந்தார்கள்." என விசிக தலைவர் விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், "பாசிச பாஜகவுடன் தமிழகத்தில் ஒரு கட்சி நேரடியாக கூட்டணி வைத்துள்ளது. பொருந்தா கூட்டணி என்பதால் மற்றொரு கட்சி மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளது.

அந்தக் கூட்டணிக்குச் செல்ல நாம் என்ன ஊழல் கட்சியா? மக்கள் சக்தியே நம்முடன் அணியா அணியா திரண்டு இருக்கும்போது இந்த அடிமை கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் நமக்கு எதுக்கு? நம்முடைய கூட்டணி சுயமரியாதை கூட்டணியாக இருக்கும்.
எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை கட்டிக்காப்பது யார்? எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி இப்போது எப்படி உள்ளது என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? வெளியில் சொல்ல முடியாமல் அப்பாவி அதிமுக தொண்டர்கள் வேதனையுடன் தவிக்கிறார்கள்." எனப் பேசி இருந்தார் விஜய். அதிமுகவை கடுமையாக விமர்சித்து விஜய் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய், அதிமுகவை விமர்சித்துப் பேசியது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த திருமாவளவன், "அதிமுக தான் அதுகுறித்து பதில் சொல்ல வேண்டும். நான் எம்ஜிஆரை பற்றி சொன்ன உடனயே ஆ.. ஊ.. என்று எகிறிக் குதித்தவர்கள் இப்போது வாயை மூடிக்கொண்டுள்ளனர். எம்ஜிஆர், அண்ணா, பெரியாரைப் பற்றி மிகவும் கொச்சையாக பேசுகிற பாஜகவினரை பற்றி அதிமுகவினர் ஒரு வார்த்தை கூட கண்டிக்கவில்லை.
தற்குறி எடப்பாடி பழனிசாமி என்று பேசியவர் அண்ணாமலை. அப்போது அவர்கள் வாயை மூடிக்கொண்டு எங்கேயோ மவுனித்துக் கிடந்தார்கள். வாய் திறந்து பேசவில்லை. சமூகத்தில் இருக்கின்ற விமர்சனங்கள் இப்படி இருக்கின்றன என்று யாரோ சொன்னதை மேற்கோள் காட்டி பேசினேன். உடனே பாய்ந்து, பிராண்டினார்கள். இப்போது விஜய் சொன்னதற்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என நீங்கள் கேட்டு சொல்லுங்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
-
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
நேரடி அரசியலில் விஜய்யின் நிழல்.. திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெகதீஷ் பழனிசாமி போட்டி? தவெக முடிவு! -
ஒவ்வொரு அமைச்சருக்கும் டார்கெட் நிர்ணயித்த முதல்வர் விஜய்.. கேபினட் மீட்டிங் பற்றி நிர்மல் விளக்கம்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
வாயில் இருந்து நல்லா வருமா?.. என்ன வரும் சிஎம் சார்?.. விஜய்க்கு உதயநிதி கேள்வி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
முதல்வர் விஜய் குறித்து அம்மா ஷோபா சொன்ன ஒரு வரி... நடிகர் விவேக் குறித்தும் உருக்கம்.. விஷயம் இதுதானாம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு











Click it and Unblock the Notifications