சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இந்த திருமாவளவனை சீண்டினால்.. நான்தான் முதல் கையெழுத்து".. சென்னையில் திருமா ஆவேசம்

திருமாவளவன் சென்னையில் பிரச்சாரம் செய்தார்

Google Oneindia Tamil News

சென்னை: "திருமாவளவனை சீண்டினால் ஆவேசப்படுவார், ஆத்திரப்படுவார், கூட்டணியை விட்டு வெளியே வருவார்.. சின்னாப்படுத்துவார் என்று பலர் நினைத்தார்கள்.. ஆனால், நான்தான் கூட்டணியில் முதல் ஆளாக போய் கைழுத்து போட்டேன்.." என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் தொடர்ந்து ஐக்கியமாகி உள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி.. தற்போது பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திருமாவளவன் வாக்கு சேகரித்தார். தன்னுடைய பிரச்சாரங்களில் அவர் பேசியதன் சுருக்கம்தான் இது:

"சிறுபான்மையின மக்கள் இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள்.. கலைஞர் ஆட்சியிலும் சரி, அதிமுக ஆட்சியிலும் சரி, சிறுபான்மையினர் மக்களுக்கு ஒரு பாதுகாப்பு இருந்தது.. ஏனென்றால், இங்கு பாஜக இல்லை.. அதுதான் காரணம்.

 சென்னை

சென்னை

பாஜக எங்கு இருக்கிறதோ, எந்த மாநிலத்தில் இருக்கிறதோ அங்கே மதவெறி மோதல்கள் உள்ளன.. உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் என்பர் முதல்வராக இருக்கிறார்.. அவர் வந்த நாளில் இருந்து பாடாய் படுகிறது.. ஒவ்வொரு நாளும் அங்கே வன்முறை.

 அடுப்பங்கரை

அடுப்பங்கரை

ஒரு வீட்டுக்குள் நுழைந்து, அடுப்பங்கரைக்கு போய் அவர்கள் என்ன கறி சமைத்திருக்கிறார்கள் என்று பார்த்து, அது மாட்டுக்கறிதான் என்று சொல்லி அவர்களை அடித்தே கொன்றுள்ளது ஒருகும்பல். இதற்கு காரணம் பாஜக. தமிழ்நாட்டிலும் இப்படி ஒரு நிலைமையை உண்டாக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மதவெறியை தூண்டுகிறார்கள்..

 இஸ்லாமியர்கள்

இஸ்லாமியர்கள்

இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஒரு வெறுப்பு அரசியலை உண்டு பண்ணுகிறார்கள். சமத்துவத்துடன் வாழும் இந்த மண்ணில் அந்த முயற்சியை முறியடிக்க வேண்டும்.இந்த மதசார்பற்ற சமத்துவ கூட்டணி இங்கு உருவாகி உள்ளது.. தலைவர் கலைஞர் அவர்கள் 8 அடி பாய்ந்தால், தளபதி ஸ்டாலின் 16 அடி பாய்கிறார்.. கொள்கை சார்ந்து இயங்கக்கூடிய தலைமையாக இருக்கிறார்.. கூட்டணி ஆரம்பித்தது முதலே இதை புரிந்து கொள்ளலாம்..

தளபதி

தளபதி

எல்லாரையும் ஒருங்கிணைத்து, எல்லாரையும் அரவணைத்து வலுவான கூட்டணியை தளபதி உருவாக்கி இருக்கிறார். கலைஞருடன் தளபதியை ஒப்பிட்டு பேசுவதாக யாரும் நினைக்க வேண்டாம்.. ஆனால், என்ன நினைத்தார்கள் என்றால், கலைஞர் இல்லை என்பதால் இந்த கட்சி இருக்காது என்று நினைத்தார்கள்.. இது சிதறிப்போகும் என்று நினைத்தார்கள்.. இந்த கூட்டணி கட்சியை கையாள முடியாது என்று நினைத்தார்கள்-.

 ஆத்திரம்

ஆத்திரம்

திருமாவளவனை சீண்டினால் ஆவேசப்படுவார், ஆத்திரப்படுவார், கூட்டணியை விட்டு வெளியே வருவார்.. இதனால் கூட்டணி சின்னாபின்னமாகிவிடும் என்று பலர் நினைத்தார்கள்.. ஆனால், நான்தான் கூட்டணியில் முதல் ஆளாக போய் கையெழுத்து போட்டேன்.. அவர்கள் கணக்கு எல்லாமே இன்று தவிடுபொடியாகிவிட்டது. ஆறா அல்லது பத்தா என்பது பிரச்சனை இல்லை, இந்த நாட்டில் பாஜக இங்கு வரணுமா, வரவேண்டாமா என்பதுதான் பிரச்சனை" என்றார் திருமாவளவன்.

 அதிமுக

அதிமுக

அதேபோல, சேத்தப்பட்டு அம்பேத்கர் திடலில் திருமாவளவன் பேசும்போது, "கருணாநிதி ஜெயலலிதா இல்லை என்பதல் அதிமுக முதுகில் சவாரி செய்து அந்த கட்சியை தன்வயப்படுத்த பாஜக முயற்சிக்கிறது.. இந்த தேர்தலில் பாஜகவினர் ஓட ஓட விரட்டப்படுவர். திருவள்ளுவருக்கு பூணூல் போட்ட படம்தான் தொடக்கத்தில் பயன்பாட்டில் இருந்தது.. ஆனால், அந்த பூணூலை தூக்கி எறிந்து புதுவடிவம் தந்தவர் கலைஞர் கருணாநிதி.. ஆனால், இப்போது பாஜகவினர் திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி அடித்து பூணூல் போடுகிறார்கள்.

 கிறிஸ்தவர்

கிறிஸ்தவர்

திமுக கூட்டணியில் கடந்த 2011 தேர்தலில் 10 சீட் வாங்கினோம்.. ஆனால், இப்போது பாஜக உள்ளே வந்துவிடக்கூடாது என்பதற்காகவே 6 சீட்டுக்கு ஒப்புக் கொண்டு முதல் ஆளாக கையெழுத்து போட்டேன்.
என்னை சிலர் கிறிஸ்தவர்என்று விமர்சிக்கிறார்கள்.. உண்மையில் என் அக்கா கிறிஸ்தவர் என்பதே அவர் இறந்த பிறகுதான் எனக்கு தெரிந்தது" என்றார் திருமாவளவன்.

English summary
Thirumavalavan slams BJP and campaign in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X