Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலித் ஒருவர் முதல்வராக வேண்டும் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவி.. திருமாவளவன் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் தலித் ஒருவர் முதலமைச்சராக வர வேண்டும் என்று ஆளுநர் ரவி கூறியிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திருமாவளவன், "தலித்துகளை அபகரிக்கும் சூழ்ச்சி" என்று விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக ஆளுநரின் கருத்துகளுக்கு தமிழ்நாடு அரசு கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஆளுநர் பேசியிருக்கும் கருத்துக்கள் சலசலப்பை கிளப்பியுள்ளன.

thirumavalavan governor dalit

ஆளுநர் என்ன பேசினார்?:

சிதம்பரத்தில் நடைபெற்ற சுவாமி சகஜானந்தா அடிகளாரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றிருந்த ஆளுநர் ஆர்.என் ரவி, "சமூக நீதி, சமத்துவம் என்ற பெயரில் ஆதி திராவிட மக்களை ஒரு தீய சக்தி பிளவுபடுத்தி வைத்திருக்கிறது. ஆதி திராவிட ஒருவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வேண்டும்" என்று கூறியிருந்தார். இவருடைய கருத்து விவாதங்களை கிளப்பியுள்ளது. இது குறித்து செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன்,

திருமாவளவன் சொன்னது என்ன?:

"ஆளுநர் ஆர்.என் ரவி மீண்டும் மீண்டும் தன்னை ஒரு அரசியல்வாதியாகவே அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆளுநர் எனும் பொறுப்பை மறந்து ஒரு அரசியல்வாதியாகவே அவர் செயல்படுவது நீடிக்கிறது. தலித்துக்களை வலதுசாரிகள் பக்கம் கவர்வதற்காக குறிப்பாக ஆர் எஸ் எஸ் பிஜேபி தளத்தை நோக்கி ஈர்ப்பதற்காக அடிக்கடி தலித்துகளைப் பற்றி பேசுகிறார்.

தலித்துகள் முதல்வராக வேண்டும் என்பது அப்பாவி தலித்துகளை வளைத்து போடும் ஒரு சூழ்ச்சி. ஆனால் தமிழ்நாட்டின் தலித்துகள் ஆளுநரின் சூழ்ச்சிக்கு ஏமாற மாட்டார்கள் என்பதை நான் தெரியப்படுத்த விரும்புகிறேன். திடீரென்று சுவாமி சகஜானந்தர் விழாவில் பங்கேற்பதும், தலித்துகளை பற்றி பேசுவதும், தலித்துகள் முதல்வராக வேண்டும் என்று கூறுவதும் ஒரு திட்டமிட்ட வலதுசாரி அரசியல் நாடகம் என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

சமூக நீதி சமத்துவம் என்று பேசக் கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆளுநரை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருவதால், ஆதிதிராவிட மக்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியை வசம் இருந்து அந்நியப்படுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு ஆளுநர் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

செல்வப்பெருந்தகையின் கண்டனம்:

முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, "தமிழகத்தை பொறுத்தவரை நீண்ட நெடுங்காலமாக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டின் மூலம் சமூக நீதி பெற்றுத் தருவதில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. அரசமைப்புச் சட்டம் 1950-ல் அமலுக்கு வந்தவுடனே கம்யூனல் ஜி.ஒ. செல்லாது என்று உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பு வழங்கிய போது, அதற்கு எதிராக திருச்சியில் போராட்டம் நடத்தியவர் தந்தை பெரியார். அந்த போராட்ட உணர்வை பண்டித நேருவிடம் பெருந்தலைவர் காமராஜர் எடுத்துக் கூறி, அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டு இடஒதுக்கீடு காப்பாற்றப்பட்டது

இன்றைக்கு இடஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அந்த பெருமை தமிழகத்தையே சாரும். அப்படிப்பட்ட வரலாறு படைத்த தமிழகத்தை ஒரு தீயசக்தி பிளவுபடுத்தி வைத்திருக்கிறது என்று ஆளுநர் யாரை குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை.

ஏற்கனவே மோகன் பகவத் அரசமைப்புச் சட்டத்தினால் எந்த பயனும் இல்லை என்று பேசி சட்டமேதை டாக்டர் அம்பேத்கரை இழிவுபடுத்தியதை எவரும் மறந்திட இயலாது. அந்த கருத்தின் அடிப்படையில் தான் சமூக நீதியையும், சமத்துவத்தையும், ஆதி திராவிட மக்களுக்கு வழங்குகிற அரசமைப்புச் சட்டத்தையும், டாக்டர் அம்பேத்கரையும் மறைமுகமாக ஒரு தீய சக்தி என்று ஆர்.என் ரவி குறிப்பிடுவதாகத் தான் கருத வேண்டியிருக்கிறது. இத்தகைய நான்காம் தர, காழ்ப்புணர்ச்சி கொண்ட அரசியலைப் பேசி வருகிற ஆர்.என் ரவி, ஆளுநர் பதவிக்கே தகுதியற்றவர் என்பது நாளுக்கு நாள் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த நாராயண குருவைப் பற்றி பேசுகிற ஆளுநர், திருவள்ளுவர், வள்ளலார், தந்தை பெரியார் பெயரை உச்சரிக்க மறுக்கிறார். ஆதி திராவிடர் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் தமிழக முதல்வராக வர வேண்டும் என்று கூறுகிறார். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அகில இந்திய தலைவராக தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் கார்கே பொறுப்பு வகித்து வருகிறார். அதற்கு முன்பும் தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் பலர் காங்கிரஸ் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். தமிழகத்தில் தலித் சமுதாயத்தைச் சார்ந்த நான் தலைவராக இருக்கிறேன்.

அகில இந்திய பாஜக தலைமையையோ, தமிழக பாஜக தலைமையையோ ஒரு தலித்துக்கு வழங்க ஆர்.என் ரவி பரிந்துரை செய்வாரா ? அல்லது குறைந்தபட்சம் தமிழக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அந்த பதவிக்கு ஒரு தலித் சமுதாயத்தைச் சார்ந்தவரை நியமிக்க பிரதமர் மோடிக்கு பரிந்துரை செய்வாரா ? ஊருக்கு உபதேசம் செய்கிற ஆளுநர் ஆர்.என் ரவி, இதையெல்லாம் செய்ய முன்வருவாரா ?

தமிழக ஆளுநர் என்பவர் அரசமைப்புச் சட்டப்படி பதவி வகிப்பவர். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. மக்களால் தேந்தெடுக்கப் பட்ட தமிழக அமைச்சரவையின் அறிவுரை இல்லாமல் எந்த செயலையும் செய்வதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அப்படியிருக்கும் போது தமிழக அரசுக்கு எதிராக நாள்தோறும் ஒரு எதிர்க்கட்சித் தலைவரைப் போல கருத்து தெரிவித்து வருகிறார். தமிழக ஆளுநர் மாளிகை என்பது, தமிழக பாஜக-வின் கிளை அலுவலகமாக மாறி வருவதை தமிழக மக்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

பொது மேடைகளில் சராசரி அரசியல் வாதியைப் போல தமிழக அரசுக்கு எதிராக ஒரு எதிர்க்கட்சியைச் சார்ந்தவரைப் போல அவர் தொடர்ந்து பேசுவாரேயானால், அவர் சுற்றுப்பயணம் செய்கிற இடங்களில் எல்லாம் தமிழக மக்கள் திரண்டெழுந்து முற்றுகை போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என தமிழக ஆளுநரை எச்சரிக்கிறேன்" என அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+