சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"திருமாவளவன்.. காசு வாங்கிட்டாரே.. திமுகவையே மிரட்டறாரு.. ஏன் தெரியுமா".. பற்ற வைத்த அர்ஜூன் சம்பத்

திருமாவளவன் மீது இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் குற்றஞ்சாட்டி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக அரசு மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் குறித்து, இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத் குற்றஞ்சாட்டி உள்ளார்.. அத்துடன் முக்கிய விமர்சனம் ஒன்றையும் திருமாவளவன் மீது அர்ஜுன் சம்பத் வீசியுள்ளார்.

நடிகரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் பேரன் ராமச்சந்திரன் என்கிற ஜூனியர் எம்ஜிஆர் நடிப்பில் கீரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் இரும்பன்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றபோது, அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.

தமிழ்நாடு இலச்சினை இல்லைனா.. ஆளுநருக்கு தகுதியே இல்ல! ஊருக்குப் போங்க.. கொந்தளித்த திருமாவளவன்! தமிழ்நாடு இலச்சினை இல்லைனா.. ஆளுநருக்கு தகுதியே இல்ல! ஊருக்குப் போங்க.. கொந்தளித்த திருமாவளவன்!

 பாய்ச்சல்

பாய்ச்சல்

அந்த நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பேசியதாக சலசலப்பு எழுந்தது.. விழாவில் பேசிய திருமாவளவன், "இன்றைக்கு திரைத்துறை கார்ப்பரேட் மயத்துக்கு இரையாகி வருகிறது. ஒரு நபர் கையில் திரையரங்குகள் வந்துவிட்டால் என்ன ஆகும்? தொழிலாளர்கள், விநியோகஸ்தர்கள், இயக்குநர்களின் உரிமைகள் பறிபோய் இருக்கிறது. அரசியலை போல சினிமாவிலும் தனிநபரை சார்ந்திருக்கக்கூடிய நிலை வளர்ந்துவருகிறது. யாரையும் மனதில் வைத்துக்கொண்டோ, எதிராகவோ பேசவில்லை. சமூக பொறுப்புணர்வு என்ற அடிப்படையில் தான் இதனை பேசுகிறேன்" என்று கூறியிருந்தார்.

 சீறிய திருமா

சீறிய திருமா

ஆனால், திருமாவளவன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை தான் தாக்கி பேசியிருக்கிறார் என்று மீடியாவில் பரபரப்பான செய்திகள் கிளம்பின. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் சினிமாவில் ஆதிக்கம் செலுத்துவதாகவும், தியேட்டர்களை கட்டுப்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்துவரும் நிலையில், கூட்டணியில் இருக்கும் திருமாவளவனே இத்தகைய கருத்துகளை பேசியிருந்தது, அரசியல் களத்தில் அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்தது.

 மாறும் திருமா?

மாறும் திருமா?

திருமாவளவன் எதற்காக இப்படி பேசுகிறார்? ஒருவேளை கூட்டணி மாற போகிறாரா? திமுகவுடன் கூட்டணி வைக்க பாமக விருப்பம் காட்டி வருவதால், திமுகவும் அதற்கு தயாராகிறதா? அதனால்தான், திருமாவளவன் அதிருப்தியில் இவ்வாறு பேசுகிறாரா? அப்படியானால் அதிமுகவுடன் கூட்டணி சேரப்போகிறாரா? என்றெல்லாம் யூகங்கள் தெறித்து பறந்தன.. ஆனால் அடுத்த 2வது நாளே இந்த யூகங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டன.. திருமாவளவனின் ஆபீசுக்கே போய் வாழ்த்தை பெற்றார் உதயநிதி ஸ்டாலின்.

 வாசலில் திருமா

வாசலில் திருமா

பதவியேற்றபோதே கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆசி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், திடீரென உதயநிதி பிஸியாகிவிட்டதால், சற்று லேட்டாகத்தான் கூட்டணி தலைவர்களை சந்திக்க நேர்ந்தது. அதேபோல, அமைச்சராகி முதல்முறை தன்னுடைய ஆபீசுக்கு வருவதால், வாசலிலேயே நின்று உதயநிதியை வரவேற்று கவுரவித்திருந்தார் திருமாவளவன். இப்படிப்பட்ட சூழலில், திருமாவளவன் உதயநிதியை தாக்கி பேசியிருந்தது குறித்து, இன்றைய தினம் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்திடம் செய்தியார்கள் கேள்வி எழுப்பினர்.

 காசு காசு

காசு காசு

சமீபகாலமாகவே, திமுகவை மறைமுகமாக திருமாவளவன் விமர்சிக்கிறாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அதெல்லாம் திருமாவளவனின் ஸ்டேட்டர்ஜி. தோழமை சுட்டுதல்.. ஏங்க, வேங்கைவாசல் கிராமத்தில் தண்ணியில மலம் கலந்திருக்காங்க.. இதுவே அதிமுக ஆட்சியில் நடந்திருந்தால், இந்த திருமாவளவன் சும்மா இருந்திருப்பாரா? பட்டியலின மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், நசுக்கப்படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள், தீண்டாமை இழிவுகள், திமுக ஆட்சியில தமிழ்நாடு முழுக்க அநியாயம், அக்கிரமம் நடக்குது பட்டியலின மக்களுக்கு எதிராக. அதைபற்றி வாய் திறக்காத இந்த திருமா, திமுககிட்ட காசு வாங்கினதுக்காக, கூட்டணியில் திமுககிட்ட மிரட்டி இன்னும் அதிக சீட் வாங்க வேண்டும் என்பதற்காக திடீர்னு ரெட்ஜெயன்ட் கம்பெனி குறித்து பேசியிருக்கிறார்.

 டிராமா பாலிட்டிக்ஸ்

டிராமா பாலிட்டிக்ஸ்

மறைமுகமாக அதைதான் அவர் சொல்றாரு. சினிமா ஒருவர் கைக்கே போய்விட்டதாம்.. இதெல்லாம் திருமாவளவனின் இரட்டை வேடம். ஆளுநரை திரும்ப பெறணும்னு, குடியரசு தலைவர்கிட்ட போய் மனு தந்துட்டு வந்திருக்காங்க. ஆளுநரை திரும்ப பெறச்சொல்லி திமுககாரர்கள் அப்படித்தான் மனு தருவார்கள். உதயநிதியை அமைச்சராக்குங்கள் என்று ஆளுநர்கிட்ட இவங்க எல்லாரும் போய் கடிதம் தந்தாங்களே? அப்போ ஆளுநர் வேணாம்னு சொல்ல வேண்டியதுதானே? இவங்களுக்கு வேணும்னா ஆளுநர் வேணும், வேணாம்னா ஆளுநர் வேண்டாம். உதயநிதியை அமைச்சர் ஆக்குறதுக்கு மட்டும் ஆளுநர் வேணுமா? திமுகவின் இரட்டை வேடம், நாடக அரசியல்" என்றார் அர்ஜுன் சம்பத்.

English summary
Thirumavalavan threatens DMK indirectly, Hindu makkal katchi Arjun sampath
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X