அதிர வைத்த சென்னிமலை கொடூரம்.. கிறிஸ்தவர்கள் மீது அட்டாக்! தமிழ்நாட்டுக்கே ஆபத்து என திருமா வார்னிங்
சென்னை: ஈரோடு சென்னிமலையில் வீட்டில் ஜெபம் செய்த கிறிஸ்துவர்களை இந்து முன்னணி அமைப்பினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் ஜான் பீட்டர். தனது வீட்டில் உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து இவர் ஜெபம் நடத்துவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் யாரும் அங்கு வந்து யாரும் ஜெபம் செய்யக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பீதியடைந்த அனைவரும் அங்கிருந்து திரும்பி சென்றுவிட்டனர். ஆனால் ஜான் பீட்டர் மட்டும் தனது வீட்டிலேயே குடும்பத்தினருடன் ஜெபம் செய்து உள்ளார். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் கூட்டமாக வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்த 30 அதிகமானோர் ஜெபம் முடிந்து வெளியில் வந்த அந்த 6 பேர் மீதும் கொலை வெறித் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு பெருந்துறை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். உயிருக்குப் போராடியவர்கள் குணமடைந்தும் வீடு திரும்ப முடியாமல், உறவினர்களின் வீடுகளில் பாதுகாப்பு கருதி தங்கி உள்ளார்கள். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கண்டங்களை பதிவு செய்து உள்ளார்கள். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னிமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "ஈரோடு, சென்னிமலை அருகே கத்தகொடிக்காடு என்னுமிடத்தில் கிறித்தவ மக்களின் மீது இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு மதவெறி அமைப்பினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தகைய மதவெறியாட்டம் தமிழகத்தில் தலைதூக்குவது மிகவும் ஆபத்தான போக்காகும். வன்முறையில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். சங்பரிவார்களின் இத்தகு வெறுப்பு அரசியல் மற்றும் வன்முறைப் போக்கினைக் கண்டித்து நேற்று சென்னிமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னி மலையை ஒட்டிய திருமுகம் மலர்ந்தபுரம் பகுதியில் இதே போல் வழிபாடு நடத்தியவர்கள் மீது இதே கும்பல்தான் தாக்குதல் நடத்தியது. எனவே இந்த மனிதநேயமற்ற மதவெறியர்களை உடனே சிறைப்படுத்த வேண்டும் என விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications