விஜய் கருத்தை வரவேற்கிறேன்.. டோட்டலாக டோனை மாற்றிய திருமாவளவன்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க
சென்னை: விவசாய நிலத்தில் விமான நிலையம் வராது என்ற உத்தரவாதத்தை கொடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில், பரந்தூர் விவசாய மக்களையும், பொதுமக்களையும் நேரகாக தலைமைச் செயலகத்துக்கு அழைத்து வந்து உங்களை நேரில் சந்தித்து முறையிடும் நிலைமை உண்டாகும் என முதல்வர் ஸ்டாலினுக்கு தவெக தலைவர் விஜய் வேண்டுகோள் வைத்த நிலையில் விஜய்யின் இந்த கருத்துக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திமுக மற்றும் பாஜகவுடன் கட்டாயமாக கூட்டணி கிடையாது என்று வெளிப்படையாக, அழுத்தமாக அறிவித்துள்ளார். திமுக அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்றும் கூறிவிட்டார். ஆனால் அதிமுகவை பற்றி எதுவும் சொல்லவில்லை. விமர்சனங்களாக சில கருத்துக்களை சொல்லியிருந்தாலும் கூட, அதிமுகவும் எங்களுக்கு எதிரி தான்..

அதிமுகவும் எங்களுக்கு கொள்கை ரீதியாக எதிரி என்று அவர் சொல்லவில்லை. அங்கே ஒரு கேள்வி எழுகிறது. திமுகவை ஆளும் கட்சி என்பதால் எதிர்க்கிறார். பாஜகவை தமிழர்களுக்கு விரோதமான கட்சி என்பதால் எதிர்க்கிறார் என்று நாம் புரிந்துகொண்டாலும், அதிமுகவை தோழமை கட்சியாக பார்க்கிறாரா என்ற கேள்வியும் எழுகிறது. அதற்கு அவர் தான் பதில் சொல்ல வேண்டும்" என்றார்.
அப்போது விஜய் பரந்தூர் விமான நிலைய மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் விவசாயிகள், பொதுமக்களை அழைத்துக்கொண்டு சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப்போவதாக விஜய் பேசியிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தொல் திருமாவளவன், "பரந்தூர் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றால், விஜய்யின் இந்த கருத்தினை நான் வரவேற்கிறேன்" என்றார்.
முன்னதாக நேற்று நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் பேசிய விஜய், பாஜக, திமுகவுடன் கூட்டணி கிடையாது என கூறினார். மேலும் பாஜகவுடன் கூட்டணி வைக்க இது ஒன்று அதிமுக, திமுக கிடையாது.. தமிழக வெற்றிக் கழகம்.. பரந்தூர் விமான நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை சென்று நேரில் சந்திக்க வேண்டும். அந்த இடத்தில் விமான நிலையம் வராது என்ற உத்தரவாதத்தை அவர்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் அப்படியே கடந்து போயிடலாம் என்று நினைத்தீர்கள் என்றால், பரந்தூர் விவசாய மக்களையும், பொதுமக்களையும் நேரகாக தலைமைச் செயலகத்துக்கு அழைத்து வந்து உங்களை நேரில் சந்தித்து முறையிடும் நிலைமை உண்டாகும். இந்த நிலைமை வராது என்று நம்புகிறேன். அதையும் மீறி வந்தால், அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். இவ்வாறு விஜய் பேசியிருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக












Click it and Unblock the Notifications