Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதா இந்துத்வா வாதியா? அடித்து பேசிய தமிழிசை! அண்ணாமலையா சொன்னாரு? குறுக்கே வந்த திருநாவுக்கரசர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்துத்துவா வாதி என அண்ணாமலை பேசியது அதிமுகவினரை கொந்தளிப்படைய செய்த நிலையில் தற்போது தமிழிசையும் அண்ணாமலையின் கருத்து உண்மைதான் என்கிறார். அதே நேரத்தில் ஜெயலலிதா ஆன்மீகவாதி தான் மதவாதி இல்லை என்கிறார் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர்.

மக்களவை தேர்தலில் 6ஆம் கட்ட வாக்குப் பதிவுக்கு முன்னதாக டெல்லியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசினார்.

Thirunavukkarasar condemns Annamalai speech about Jayalalithaa

அப்போது,” தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை பாஜக நிரப்பி வருகிறது. ஜெயலலிதா தனது இந்து அடையாளத்தை காட்டினார். அவர் மிகச்சிறந்த இந்துத்துவா வாதியாக இருந்தார். அதிமுக ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இந்துத்துவா கொள்கைகளில் இருந்து விலகிச் சென்று விட்டது.

அண்ணாமலை: இதனால் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்களர்கள் பாஜக பக்கம் வந்துவிட்டார்கள். இதனால் பாஜக தமிழகத்தில் பெரிய இடத்தை பிடித்தது என பேசியிருந்தார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுக தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதற்கு ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலா, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார்,ஜெயக்குமார் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழிசை செளந்தரராஜன்: இந்நிலையில் அண்ணாமலையின் கருத்து உண்மைதான் என கூறியிருக்கிறார் தமிழக பாஜக முன்னாள் தலைவரும், தெலுங்கானாவின் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன். இதுதொடர்பாக பேசிய அவர்,ஜெயலலிதா ஒரு இந்துத்துவா தலைவர் தான். அவர் கரசேவையை ஆதரித்தார். அவர் ஆதரித்த போது அதிமுக தலைவர்கள் எதிர்த்து இருக்கலாமே. ஜெயலலிதா இப்போது இருந்திருந்தால் நிச்சயமாக அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று பால ராமரை வழிபட்டு வந்திருப்பார்.

ஜெயலலிதா:
மேலும் இந்தியாவின் பல நூறாண்டு கனவு நினவாகியிருக்கிறது என்று அழுத்தமாக தனது கருத்தை பதிவு செய்து இருப்பார். அதிமுகவில் உள்ள தலைவர்களும் இதே கொள்கையில் தான் இருந்தார்கள். ஜெயலலிதா கர சேவையை ஆதரித்த போது இன்று எதிர்த்து பேசுகிறவர்கள் எல்லாம் அப்போது எதிர்த்து பேசினார்களா. இது குறுகிய வட்டம் இல்லை. பரந்த வட்டம். ஜெயலலிதாவை அவர்கள் குறுகிய வட்டத்தில் வைக்க நினைக்கிறார்கள். நாங்கள் பெரிய வட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறோம்” என கூறினார்.

திருநாவுக்கரசர்: இந்நிலையில் ஜெயலலிதா ஆன்மீகவாதிதான் ஆனால் மதவாதி இல்லை என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர்," எனக்கு தெரிந்தவரை தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு ஆன்மீகவாதி தான். அவர் கடவுளை கும்பிடுவார் அதற்காக அவர் மதவெறி பிடித்தவர் என்று நான் சொல்ல மாட்டேன். தெய்வத்தின் மீது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நம்பிக்கை வைத்திருந்தார்.

மதவாதி இல்லை: எம்ஜிஆருக்கு கூட கடவுள் நம்பிக்கை இருந்தது. சாமி கும்பிடுபவர்கள் எல்லாம் மதவெறியர்களா? ஜெயலலிதா ஒரு ஆன்மீகவாதி.. மதவாதி அல்ல.. கலைஞர் கூட கடவுளைப் பற்றி பேசி இருக்கிறார்.. கடவுளை எனக்கு பிடிக்குமா என்பதை விட கடவுளுக்கு என்னை பிடிக்குமா என்பது தான் கேள்வி என பேசி இருக்கிறார்" எனவே இதெல்லாம் தேவையில்லாத விவாதம்" எனக் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+