Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆவடியில் ஆசை ஆசையாக வீடு கட்டிய சங்கர்..  மின் இணைப்பு தந்ததுமே வந்த அழைப்பு.. சிக்கிய அதிகாரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை சபி நகரை சேர்ந்த சங்கர் என்பவர் திருநின்றவூர் அருகே ஏ.என்.எஸ். நகரில் புதிதாக வீடு கட்டியிருக்கிறார். அந்த வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு சங்கர் திருநின்றவூர் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அதற்காக அரசு நிர்ணயித்த தொகையையும் கட்டியுள்ளார். ஆனால் என்ன தான் பணம் கட்டினாலும், லஞ்சம் கேட்டதாக மின்வாரிய வணிக ஆய்வாளர் ரஜினி மீது புகார் எழுந்தது. அவரை பொறி வைத்து லஞ்ச போலீசார் பிடித்தனர். இறுதியாக கைது செய்து அழைத்து சென்றனர்.

இன்றைக்கு கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், நகராட்சி அதிகாரி, மாநகராட்சி ஊழியர், மின் வாரிய அலுவலர், காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலக உதவியாளர்கள் என யார் லஞ்சம் கேட்டாலும் கொடுக்காதீர்கள்.. அப்படி லஞ்சம் கேட்கும் ஒவ்வொருவர் குறித்தும் புகார் அளிக்க வேண்டும். லஞ்சம் கொடுத்து விரைவாக காரியத்தை சாதிக்கலாம் என்ற மனநிலை தான் லஞ்சம் இன்றும் குறையாமல் இருக்க காரணமாக உள்ளது. லஞ்சம் கேட்போர் குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம்.

thiruninravur EB commercial inspector arrested for taking a bribe to provide electricity connection

இல்லை என்றால் நேராக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கலாம். இதன் மூலம் ஓரளவு லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் திருந்த வாய்ப்பு உள்ளது. ஒரே நேரத்தில் எல்லா ஊரிலும் லஞ்சம் கேட்கும் அனைவரின் மீது அதிரடியாக புகார் அளிப்பதன் மூலம், கண்டிப்பாக மக்களால் பிரச்சனையை தீர்க்க முடியும். அதேநேரம் அங்கு ஒன்று, இங்கு ஒன்று என்று வரும் லஞ்ச புகார்கள், வழக்கமான கைது நடவடிக்கையாக மட்டுமே இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. ஏனெனில் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அவர்கள் திருந்தி இருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை சபி நகரை சேர்ந்த 36 வயதாகும் சங்கர் என்பவர் திருநின்றவூர் அருகே ஏ.என்.எஸ். நகரில் புதிதாக வீடு கட்டியிருக்கிறார். அந்த வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு சங்கர் திருநின்றவூர் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்கிறார். அதற்காக அரசு நிர்ணயித்த தொகையையும் கட்டியிருக்கிறார்.

இந்த நிலையில் திருநின்றவூர் மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரிந்து வரும் 41 வயதாகும் ரஜினி என்பவர் சங்கர் புதிதாக கட்டிய வீட்டிற்கு சென்று ஆய்வு செய்திருக்கிறார். அப்போது மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் வேலை சம்பந்தமாக சங்கர் டெல்லிக்கு சென்று விட்டார். சங்கர் வீட்டிற்கு மின் இணைப்பும் கொடுக்கப்பட்டது. டெல்லியில் இருந்து சங்கர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்துள்ளார். அதை அறிந்த ரஜினி, சங்கருக்கு போன் செய்து ரூ.3 ஆயிரம் லஞ்ச பணம் கேட்டேனே? இன்னும் தரவில்லையே? என கேட்டாராம்.

இதுகுறித்து சங்கர் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, மாலா உள்ளிட்ட 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை திருநின்றவூர் கோமதிபுரம் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு வந்தார்கள். தொடர்ந்து சங்கரிடம் ரூ.3 ஆயிரம் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். சங்கர் அலுவலகத்தில் இருந்த வணிக ஆய்வாளர் ரஜினியிடம் லஞ்ச பணத்தை கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+