நீதிபதியாக இருக்கவே தகுதியற்றவர்.. சிஆர்பிஎஃப் வீரர்களை அனுப்புவதா? பெ சண்முகம் ஆவேசம்
சென்னை: நீதிபதியாக இருக்கவே தகுதியற்றவர் சுவாமிநாதன் என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ சண்முகம் தெரிவித்துள்ளார். இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பளிப்பதை நீதிபதி சுவாமிநாதன் வழக்கமாக கொண்டுள்ளார் என்றும், நீதிமன்ற பாதுகாப்புக்கான மத்திய படையினரை (சிஆர்பிஎஃப்) திருப்பரங்குன்றம் அனுப்பியதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜிஆர் சுவாமிநதன் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு உரிய மண்பானை, நெய், காடாத்துணி போன்றவற்றை பிற்பகல் 3.30 மணியளவில் கோயில் பணியாளர்கள் கொண்டு சென்றனர்.

இதனால் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றுவார்கள் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டை போலவே உச்சி பிள்ளையார் கோவில் வளாகத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனால் இந்து முன்னணியினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து இந்து முன்னணியினர் மற்றும் இந்த அமைப்பினர் போலீசாரின் தடுப்புகளை உடைத்து கொண்டு மலையை நோக்கி ஓடினர். தொடர்ந்து, திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணியினர் மற்றும் போலீசார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படவில்லை என்று கூறி இந்து அமைப்புகள் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டன.
தடுப்புகளை உடைத்து ஆர்ப்பாட்டாக்கார்கள் செல்ல முயன்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒரு காவலர் காயம் அடைந்தார். இந்த சம்பவத்திற்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
நீதிமன்ற பாதுகாப்புக்கான மத்திய படையினரை திருப்பரங்குன்றம் அனுப்பியதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். மாநில அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கிறார் நீதிபதி சுவாமிநாதன். இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பளிப்பதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்
மக்களுக்குள் பகைமையை ஏற்படுத்தும் விதமாகவே அவர் செயல்பட்டு வருகிறார். நீதிபதியாக தொடரவே அவருக்கு தகுதியில்ல்லை. தமிழ்நாட்டை கலவர காடாக மாற்ற முயற்சிக்கிறார்கள். உறுதியான நிலைப்பாட்டை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள். இவ்வாறு அவர் கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications