திருப்பரங்குன்றத்தின் மலையுச்சியில் யாரது? ஆடு வெட்டி கந்தூரி? கோவிலுக்கே மலை சொந்தம்: இந்து முன்னணி
சென்னை: எந்த உரிமையும் இல்லாத முஸ்லிம் அமைப்பினர், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றும், அங்குள்ள தர்காவில் ஆடு வெட்டி கந்துாரி செய்வோம் எனவும், கூறி வருகின்றனர். இதுபோன்ற செயல்களை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் போராட்டம் முன்னெடுக்கப்படும்" என்று இந்து முன்னணி எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
திருப்பரங்குன்றம் பள்ளிவாசல் செயலாளர் ஆரிப்கான் கடந்த மாதம் செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டி தந்திருந்தார். அதில், "ராஜபாளையத்தில் உள்ள மலப்பட்டியை சையது அபுதாகிர் என்பவர் தன்னுடைய குடும்பத்திருடன் சேர்ந்து கந்தூரி நேர்த்திக்கடன் செலுத்த ஆடு வெட்டுவதற்காக, ஆடுடன் வந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் ஆடு, கோழி பலியிடக் கூடாது என்று சொல்லி அவர்களை தடுத்துள்ளனர்.

ஆர்டர் காப்பி : இது தொடர்பாக ஆர்டர் காப்பி உள்ளதா? என கேட்டதற்கு அவர்கள் தரவில்லை சில வருடங்களாகவே திருப்பரங்குன்றம் மலையை வைத்து சில அரசியல் நடைபெறுகிறது.
1920ல் லண்டனில் நடைபெற்ற வழக்கின் போது இந்த மலை எங்களுக்கு என தீர்ப்பளிக்கப்பட்டது. இப்படி ஒவ்வொரு விஷயமும் நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்று எங்கள் உரிமைகளை வாங்கி வருகிறோம். நாகூர் கோரிப்பாளையம் போல இங்கும் 400 ஆண்டுகளாக கந்தூரி வழிபாடு நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயமும் திமுக அரசிற்கு ஆதரவளித்ததால் அதிகாரிகள் எதிர்க்கிறார்களா என தெரியவில்லை" என்று கூறியிருந்தார்.
இந்து முன்னணி: திருப்பரங்குன்றம் மலையில் அன்று இஸ்லாமியர்கள் நடத்தியிருந்த போராட்டம், மிகப்பெரிய பரபரப்பை தந்துவிட்டது.. இந்நிலையில், அந்த விவகாரத்துக்கு இந்து முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.. இதுகுறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கண்டன அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் தெரிவித்திருப்பதாவது:
"முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடு திருப்பரங்குன்றம். ஹிந்துக்களின் இந்த புனிதத்தலம் உள்ள மலை, முருகன் குன்றம் என்று அகநானுாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, மதுரைக் காஞ்சி, பரிபாடல் போன்ற பக்தி இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளது.
திருப்பரங்குன்றம்: மலை யாருக்குச் சொந்தம்? என்ற பிரச்னை வந்தபோது, 'மலை முழுதுமே திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குச் சொந்தமானது' என, லண்டன் பிரிவியூ கவுன்சில் தீர்ப்பு கூறியுள்ளது. அதன் அடிப்படையில் நீண்ட காலமாக மலை மேல் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. தீபம் ஏற்றுவதை தடுத்த இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அரசு செயல்பட்டதால், 1996ம் ஆண்டு, ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது.
வழக்கை விசாரித்த ஐகோர்ட், குன்றில் உள்ள தீபத்துாணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும், ஹிந்து அறநிலையத்துறை, மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றி வருகிறது.
கந்தூரி: தற்போது எந்த உரிமையும் இல்லாத முஸ்லிம் அமைப்பினர், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றும், அங்குள்ள தர்காவில் ஆடு வெட்டி கந்துாரி செய்வோம் எனவும், கூறி வருகின்றனர். இதுபோன்ற செயல்களை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் போராட்டம் முன்னெடுக்கப்படும்" என்று காட்டமாக கூறியிருக்கிறார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications