“நீதிபதி உத்தரவிட்ட.. சில நிமிடங்களில் இவ்வளவு பேர் எப்படி திரண்டார்கள்?” பெ.சண்முகம் கேள்வி
மதுரை: திருப்பரங்குன்றத்தில் தீப தூண் எனப்படும் கல்லில், கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில நிமிடங்களில் திருப்பரங்குன்றம் கோயில் முன்பு எப்படி பலர் கூடினார்கள்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இது குறித்து தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை வழங்கியிருக்கும் தீர்ப்பு சட்டவிரோதமானது. திருப்பரங்குன்றத்தில் திரண்டு இருந்தவர்கள் முருக பக்தர்கள் அல்ல சங்பரிவார் பயங்கரவாதிகள்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்கிற வழக்கில், உடனடியாக மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், கோயில் அதிகாரி ஆகியோரை ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, 'இன்று இரவு ஏழு மணிக்குள் நீங்கள் கட்டாயமாகத் தீபத்தை ஏற்றித்தான் ஆகணும். பத்து பேரோடு போகலாம்' என்று நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால், இப்போது வந்திருக்கும் செய்திகளைப் பார்த்தால், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., இந்து முன்னணி போன்றவற்றைச் சார்ந்தவர்கள் பல்லாயிரக்கணக்கில் அங்கே திரண்டிருக்கிறார்கள். நீதிபதி உத்தரவிட்டு சில நிமிடங்களில் எப்படி பல்லாயிரக்கணக்கான பேர் அங்கே திரண்டார்கள்? அப்படியானால், 'இப்படித்தான் உத்தரவு வரும்' என்பது ஏற்கனவே அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அதன்படி அவர்கள் அங்குத் திரண்டிருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை வழங்கியிருக்கும் தீர்ப்பு சட்டவிரோதமானது. திருப்பரங்குன்றத்தில் திரண்டு இருந்தவர்கள் முருக பக்தர்கள் அல்ல சங்பரிவார் பயங்கரவாதிகள்.
— Shanmugam P (@Shanmugamcpim) December 4, 2025
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்கிற வழக்கில், உடனடியாக மாவட்ட ஆட்சியர், காவல்… pic.twitter.com/Fgow83Tmbh
ஆகவே, இதன் விளைவாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியாத ஒரு நிலைமையை அந்த இந்துத்வா சக்திகளே ஏற்படுத்தியிருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக, "கார்த்திகை தீபம் நேற்றே முடிந்து விட்டது. இன்று நீதிபதி சுவாமிநாதன் அவர்கள் உத்தரவுப்படி திருப்பரங்குன்றத்தில் ஏற்றப்படும் தீபத்திற்கு என்ன பெயர். எதற்கெடுத்தாலும் ஆகம விதி என்று கொந்தளிக்கும் இந்து மத காவலர்கள் இப்போது என்ன சொல்வார்கள் என்பதை அறிய தமிழக மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஏனென்றால் குறிப்பிட்ட நட்சத்திரம், குறித்த நேரத்தில்தான் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று இவ்வளவு காலமும் கூறி வந்தார்கள் எது உண்மை?" என்று சண்முகம் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஏற்கெனவே, இந்த விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து சிபிஎம் கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகிறது. "ஜி.ஆர் சுவாமிநாதன் நீதிபதியாக நீடிப்பதற்கே தகுதியற்றவர் இப்படி மக்கள் மத்தியிலே மோதலையும் மாநில அரசாங்கத்திற்கும், மத்திய படைக்குமான மோதலை உருவாக்கக்கூடிய வகையில் உத்தரவை வெளியிட்டிருக்கிற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது தலைமை நீதிபதி அவர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications