திருப்புவனம் அஜித்குமார் அடித்து கொல்லப்பட்ட வழக்கு: விரைவில் கைதாகும் டிஎஸ்பி? முன் ஜாமீன் தள்ளுபடி
சென்னை: அஜித்குமார் லாக் அப் டெத் தொடர்பான வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது. சமீபத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போது அதில் டிஎஸ்பி சண்முகசுந்தரம் உள்பட 10 பேர் குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டனர். குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டதால், கைது ஆகக்கூடும் என்பதால், டிஎஸ்பி சண்முகசுந்தரம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் டிஎஸ்பி சண்முகசுந்தரம் இந்த வழக்கில் கைதாக கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

அஜித்குமார் லாக் அப் டெத் வழக்கு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோயிலில் அஜித்குமார் என்ற இளைஞர் தற்காலிக காவலாளியாக பணியாற்றி வந்தார். கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நிகிதா என்ற பெண் பேராசிரியை தனது நகை திருடு போய் விட்டதாக புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், இளைஞர் அஜித்குமாரை அழைத்து சென்ற போலீசார், அடித்து துன்புறுத்தியுள்ளனர். போலீசார் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்தார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக மானாமதுரையை சேர்ந்த தனிப்படை போலீசாரான கண்ணன், பிரபு, ராஜா, ஆனந்த், சங்கரமணிகண்டன், போலீஸ் வாகன டிரைவர் ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ, இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட போது, மானாமதுரை போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றிய சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார், ஏட்டு இளையராஜா ஆகியோரையும் குற்றவாளிகளாக இந்த வழக்கில் சேர்த்தது.
முன் ஜாமீன் மனு தள்ளுபடி
இதன்படி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டதால், கைது ஆகக்கூடும் என்பதால், டிஎஸ்பி சண்முகசுந்தரம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கைது செய்ய வாய்ப்பா?
டிஎஸ்பி சண்முகசுந்தரத்தை இதுவரை ஏன் கைது செய்யவில்லை என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சண்முகசுந்தரத்தை கைது செய்து விசாரிக்க போவதால் முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று சிபிஐ தரப்பு தனது வாதத்தை வைத்து இருந்தது. சிபிஐ தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications